பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு தொடர்ந்தும் பின் தங்கிய நிலையில்!

அவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு தொடர்ந்தும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்கட்சியான லேபர் கட்சியை விட மால்கம் டர்ன்புல் தலைமையிலான அரசு பின்தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

The Australian வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது.

கடந்த கருத்துக் கணிப்பினை விடவும் லேபர் கட்சி ஒரு புள்ளியால் முன்னேற்றம் அடைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக மால்கம் டர்ன்புல் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறார்.

பிரதமர் மால்கம் டர்ன்புல் இம்முறை ஒருபுள்ளி அதிகமாகப் பெற்று எதிர்கட்சித் தலைவர் Bill Shorten -ஐ விடவும் 47-30 என முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.