அவுஸ்திரேலியமுரசு

நியூசிலாந்து – துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. அதன்படி துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜெசிந்தா உறுதி அளித்தார். இதற்கிடையில் அங்கு பாதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் மே 18-ம் திகதி பொதுத்தேர்தல்!

ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவி வகித்தபோதும் உள்கட்சி பூசல் தொடர்ந்தது. முதலில் நடந்த ஓட்டெடுப்பில் தப்பிய அவருக்கு, மீண்டும் எதிர்ப்பு வலுத்ததால் மீண்டும் ஓட்டெடுப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பிரதமருக்கான போட்டியில் இருந்து டர்ன்புல் விலகினார். ஸ்காட் மாரிசன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 10 ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஊதிய உயர்வு கேட்டு பேரணி !

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஊதிய உயர்வும் வேலையிடப் பாதுகாப்பும் கோரி பேரணி நடத்தியுள்ளனர். அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதால் பேரணி பல எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தில் ஊதிய உயர்வு, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர். “விதிகளை மாற்றவும்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். பெரும் எண்ணிக்கையில் அவர்கள் திரண்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

Read More »

அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் பெருமளவில் பரவிவருவதாக சந்தேகிக்கப்படும் தட்டம்மை-Measles குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சுகாதாரத்திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தொற்று நோயிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும் சுகாதாரணத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் இதுவரைக்கும் 84 பேருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த நோய் தாக்கம் பிலிப்பீன்ஸ் உட்பட ஏனைய நாடுகளில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் வெளிநாடு சென்று வருகின்ற பயணிகளினால்தான் இந்த நோய் அவுஸ்திரேலியாவுக்குள் பெருமளவு கொண்டுவரப்பட்டிருக்கிறது. வெளிநாடு செல்கின்ற அவுஸ்திரேலியர்கள் தடுப்பூசியை ...

Read More »

அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொன்ற தந்தை!

அவுஸ்திரேலியாவில் நபர் ஒருவர் மொத்த குடும்பத்தையும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷவாயு செலுத்தி இரண்டு பிஞ்சு குழந்தைகள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் பின்னணி வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தவர் 44 வயதான பெர்னாண்டோ மன்ரிக். கடந்த 2016 ஆம் ஆண்டு அல்டோபர் மாதம் இவரது மனைவி மரியா லூட்ஸ், பிள்ளைகள் எலிசா மற்றும் மார்ட்டின் என நால்வரும் பரிதாபமாக இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையில் மன்ரிக் என்பவரே தமது மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு தப்பிக்க ...

Read More »

அவுஸ்திரேலியாவில் திடீரென வெடித்து சிதறிய கார்: குழந்தைகளை காப்பாற்ற போராடிய தாய்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாய் ஒருவர், கார் வெடித்து சிதறுவதற்கு சில வினாடிகளுக்கு முன் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த கேத்ரின் மேய்ஸ் என்கிற தாய் தன்னுடை நான்கு வயது மற்றும் ஐந்து மாத குழந்தையுடன் பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது அவருடைய காரில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேட்டரியில் இருந்து வினோதமான ஒலி எழுந்துள்ளது. உடனே தன்னுடைய 4 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் வந்துள்ளார். கார் முழுவதும் புகை சூழ ஆரம்பித்துள்ளது. தீவிரத்தை உணர்ந்த கேத்ரின் வேகமாக தன்னுடைய ...

Read More »

அவுஸ்திரேலிய பெண்ணின் சாதனை யூடியூபில் 1.3 மில்லியன் பேர் பார்த்த காணொளி!

அவுஸ்திரேலியாவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது சுகப்பிரசவத்தை யூடியூபில் நேரலை செய்துள்ளதை இதுவரை 1.3 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். Sarah Stevenson என்ற பெண்மணி பிரபல சுகாதார மற்றும் உடற்பயிற்சி யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சிட்னியை சேர்ந்த இவர் சுகப்பிரசவத்தின்போது அனுபவித்த வேதனையை பகிர்ந்துகொண்டதன் மூலம் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார் . 30 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தனது உடலை அமைதிப்படுத்தி குழந்தை பெற்றெடுத்துள்ளார். அனுபவித்த வலிகள் முதல் அவர் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அனைத்தும் காணொளி இடம் பெற்றுள்ளன. இதற்கு Sarah ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தீ விபத்து! ஈழத் தமிழ் அகதி காயம்!

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஈழ அகதி ஒருவர் காயமடைந்துள்ளார். ஈழத்தைச் சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். ஆபத்தான நிலைக்குள்ளான விக்னேஷ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட விக்னேஷின் மருத்துவ செலவிற்காக 13,000 டொலருக்கும் அதிக பணம் புலம்பெயர் தொழிலாளர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை இடம்பெற்ற இந்த தீவிபத்தில் தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாக ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 5 மாநில மக்களுக்கு காத்திருக்கும் “பரிசு”!

அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை அதிகாலை இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நேரமாற்றத்தின் மூலம் பலர் வழக்கமாக உறங்கும் நேரத்துடன் ஒரு மணி நேரம் அதிகமான தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர். வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஒக்டோர் மாதங்களில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நேரமாற்றம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த மாற்றத்தின் பிரகாரம், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் கன்பரா மாநில கடிகாரங்கள் ஏழாம் திகதி ...

Read More »

முஸ்லிம்களே! உங்கள் சொந்த நாடுகளிலேயே இருங்கள்!

உலகநாடுகளில் உள்ள முஸ்லீம்களை ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரத்தை நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் முஸ்லிம்களை தங்கள் சொந்த நாடுகளிலேயேயிருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். சிட்னியை சேர்ந்த மகிர் அப்சர் அலாம் என்ற ஐஎஸ் உறுப்பினரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் குர்திஸ் ஆயுத குழுவினர் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி பகுதி மீது தாக்குதல் மேற்கொண்டவேளை மகிர் அலாமையும் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கைதுசெய்துள்ளனர். 24 வயது பல்கலைகழக மாணவரான அவர் 2014 இல் சிரியா சென்று ஐஎஸ் ...

Read More »