அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஊதிய உயர்வும் வேலையிடப் பாதுகாப்பும் கோரி பேரணி நடத்தியுள்ளனர்.
அடுத்த மாதம் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுவதால் பேரணி பல எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தில் ஊதிய உயர்வு, மக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர்.
“விதிகளை மாற்றவும்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
பெரும் எண்ணிக்கையில் அவர்கள் திரண்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.