அவுஸ்திரேலியாவில் திடீரென வெடித்து சிதறிய கார்: குழந்தைகளை காப்பாற்ற போராடிய தாய்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த தாய் ஒருவர், கார் வெடித்து சிதறுவதற்கு சில வினாடிகளுக்கு முன் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கேத்ரின் மேய்ஸ் என்கிற தாய் தன்னுடை நான்கு வயது மற்றும் ஐந்து மாத குழந்தையுடன் பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார் அப்போது அவருடைய காரில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேட்டரியில் இருந்து வினோதமான ஒலி எழுந்துள்ளது. உடனே தன்னுடைய 4 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியில் வந்துள்ளார்.

கார் முழுவதும் புகை சூழ ஆரம்பித்துள்ளது. தீவிரத்தை உணர்ந்த கேத்ரின் வேகமாக தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்த ஓடியுள்ளார்.  அடுத்த சில வினாடிகளில் அந்த கார் வெடித்து சிதறியுள்ளது.

இதுகுறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்று எனக்கும், என்னுடைய பையன்களுக்கும் தேவதூதன் ஒரு பாதுகாவலனாக இருந்துள்ளான். வாழ்க்கை மிகவும் சிறியது. எப்பொழுது வேண்டுமானாலும் முடிந்துவிடும் என்கிற விழிப்புணர்வு அழைப்பாகவே நான் இதை பார்க்கிறேன். சொத்துக்களை விட உயிர் தான் மிகவும் முக்கியமான ஒன்று என்னுடைய காரில் இயந்திர கோளாறு அடிக்கடி ஏற்படும் என்பதால், தனியாக வேறு ஒரு பேட்டரி வாங்கி காரில் வைத்திருந்தேன். அந்த பேட்டரியில் இருந்து தான் திடீரென சத்தம் வந்தது.

நானும் என்னுடைய குடும்பத்தினரும் அதிர்ஷ்டசாலிகள். நலல்வேலையாக நான் கார் ஒட்டிக்கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் நிகழவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொழில்நுட்ப நிபுணர் ட்ரெவோர் லாங் கூறுகையில், இதுபோன்ற உயர்திறன் கொண்ட பேட்டரிகள் தோல்வியடையும் போது மிகப்பெரிய ஆபத்தினை ஏற்படுத்தக்கூடும். நீண்ட நேரம் வெயிலில் இருந்த காரணத்தினாலே வெடித்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.