2017ம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்காக 2011ம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது அரச பணம் மற்றும் நன்கொடையாளர்களின் 680 மில்லியன் ரூபாய் பணம் இலங்கை வங்கியின் கொழும்பு பெரு நிறுவன கிளையின் 71199250 என்ற இலக்கத்தில் பொதுநலவாய விளையாட்டு என்ற பெயருடனான கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்த கணக்கில் 246 மில்லியன் ரூபாய் மாத்திரமே மீதமாக உள்ளதென ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி ஆபாசப்படம் பார்த்தவர் பணிநீக்கம்
அவுஸ்திரேலியா நாட்டில் அலுவலகம் ஒன்றில் ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ரூ 14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிட்னி நகரில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த மேலாளருக்கு அலுவலகம் பிரத்யோகமான மடிக்கணிணி ஒன்று வழங்கியிருந்தது. இந்நிலையில், அலுவலகத்தில் இருந்தபோது அந்த மடிக்கணிணியில் ஆபாசப்படம் பார்த்ததும், ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்ததும் தெரியவந்தது. அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக நிறுவனம் அவரை கடந்த ஜனவரி மாதம் அதிரடியாக ...
Read More »அவுஸ்ரேலியாவில் 5 மாத குழந்தையை கொன்ற தாய்: 8 வருடம் சிறை
அவுஸ்ரேலியா நாட்டில் குடிபோதையில் 5 மாத மகனை கொன்ற தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் மெலிசா என்ற 27 வயதான தாயார் ஒருவர் தனது 5 மாத மகனுடன் வசித்து வந்துள்ளார். மெலிசாவிற்கு மது அருந்துதல் மற்றும் போதை மருந்து எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் நாள் மெலிசா அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதை மருந்தையை எடுத்துள்ளார். பின்னர், சிகரெட் பற்ற ...
Read More »அவுஸ்ரேலியாவில் ஆபத்தான பொருட்கள்
அவுஸ்ரேலியாவில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் இங்குள்ள நிறுவனங்களில் மோசமானவை எவை என்பதற்கான இவ்வருட Choice Shonky Awards அறிவிக்கப்பட்டுள்ளன. Choice நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மோசமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான Shonky விருதுகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகைகயில் மக்களை ஏமாற்றும் வகையிலான விளம்பரங்கள், ஆபத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் மற்றும் அந்தப் பொருள்/சேவை குறித்த பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களிடம் பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தவருட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக Choice நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் Samsung, Amex உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்குகின்றமை ...
Read More »வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று (5)டர்பனில் நடக்கிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஒருநாள் போட்டி நாளை டர்பனில் நடக்கிறது. இதிலும் தென்ஆப்பிரிக்கா வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை இழக்காமல் இருக்க ...
Read More »இலங்கைப் பெண்ணொருவருக்கு அவுஸ்திரேலியாவில் அபராதம்
சிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய காவல்துறை அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர். அனுராதபுரம், திரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சோமரத்னகே தயாவதி என்ற பெண்ணுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இரண்டு அபராதங்களை விதித்துள்ளனர். குறித்த பெண், ஏ013589868 என்ற இலக்கத்தை உடைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரிமையானவர். 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ...
Read More »அவுஸ்திரேலிய பிரஜா உரிமையுடையவர்களின் பெற்றோருக்கான விசா
அவுஸ்திரேலிய அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவரும் வகையில் புதிய தற்காலிக பெற்றோர் விசா ஒன்று எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜுலை முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது. அந்த வகையில், இந்த விசா தொடர்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 12 விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. புதிய தற்காலிக விசாவுடன் பெற்றோர் 5 வருடங்கள் வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். விசா கட்டணம் ...
Read More »அவுஸ்ரேலியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்த ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (2) 2-வது நாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ரோசவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 22 ரன்னிலும், ரோசவ் 75 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த டு பிளிசிஸ் 111 ...
Read More »அவுஸ்ரேலியா எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்
ஜோகன்னஸ்பர்க்கில் இன்று(2) நடைபெற்று வரும் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அம்லா இடம்பெறவில்லை. இது மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 295 ரன்களை சேஸிங் செய்யும்போது தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர்கள் டி காக் (178), ரொஸவ் (63) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ...
Read More »அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிர்ப்பு
அவுஸ்ரேலியாவில் உள்ள ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனம், பெண்கள் அணியும் லெக்கின்சில், இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிட்டு, விற்பனை செய்வதற்கு இந்துக்கள் தரப்பில் கண்டனமும், அதிருப்தியும் எழுந்துள்ளது. மேலும், இவ்வாறான லெக்கின்ஸ்களை அந்நிறுவனம் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடைகளிலும், உள்ளாடைகளிலும் இந்து கடவுள்களின் உருவங்களை அச்சிட்டு, விற்பனை செய்வதில் சில வெளிநாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த செயலுக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் வருத்தம் தெரிவிப்பதும், மன்னிப்பு கோருவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த ...
Read More »