அவுஸ்திரேலியமுரசு

50 வயது வரை விளையாட விரும்புகிறேன்: அவுஸ்ரேலிய வீரர்

அவுஸ்ரேலியாவின் இடது கை ‘சைனமேன்’ சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக், 50 வயது வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். இவர் ‘சைனமேன்’ பந்து வீச்சு மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்கியவர். தற்போது 46 வயதாகும் இவர், அவுஸ்ரேலிய சர்வதேச அணியில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் பிக் பாஷ் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் ஸ்காட்சர்ஸ் அணி கடந்த சீசனில் இவரை விடுவித்தது. இருந்தாலும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த ...

Read More »

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தபால் தலைகள் அவுஸ்ரேலியாவில் வெளியீடு!

தீபாவளியை முன்னிட்டு Australia Post நிறுவனம் சிறப்பு முத்திரைகள் (தபால் தலைகளை) வெளியிடுகின்றது. பல்வேறுபட்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் அவுஸ்திரேலியாவில் வாழுகின்றனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை அடையாளப்படுத்தும் முத்திரைகளை வெளியிடுவதில் தாம் பெருமையடைவதாக Australia Post-இன் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரு டொலர் Red heart முத்திரையுடன், கைகளில் தீபமேந்தியவாறு காணப்படும் சிறப்பு முத்திரைகள் வெளியிடப்படவுள்ளது. குறித்த தபால் தலைகள் எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி முதல் வெளியாகுமென கூறப்பட்டுள்ளது. இப்புதிய முத்திரைகளை இணையம் மற்றும் தபால் ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட சில தபால் ...

Read More »

அவுஸ்ரேலிய சாரதிகள் கவனத்திற்கு!

அவுஸ்ரேலியாவில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிட்னி, மெல்பேர்ன் வாகன சாரதிகளிடம் Traffic congestion charge எனப்படும் கட்டணத்தை வசூலிப்பதன் மூலம், போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல, போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் நேரத்தில் (Peak hours), இதற்குரிய சிறிய கட்டணத்தை வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை சிறப்பாக இருக்குமென Grattan Institute என்ற அமைப்பு கூறியுள்ளது.

Read More »

தேர்தலில் போட்டியிடுவதற்கு காரணம் இதுதான்!

தெற்கு அவுஸ்ரேலிய மாநில தேர்தலில் நிக் செனாஃபோன் அணித் தலைவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். கிழக்கு அடிலெய்டின் ஹார்ட்லி தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; ஒரு ஒக்ஸிஜன் தொட்டி இல்லாமல் எவரெஸ்ட் மலை மேல் ஏறுவதைப் போன்று இந்தத் தேர்தல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என கூறினார். அத்துடன் தனது சொந்த மாநிலத்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மக்கள் தொகை தொடர்ந்த்தும் குறைந்து வரும் நிலையே இவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்கு தூண்டியது என்றார். ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார்!

அவுஸ்ரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார். அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் (29) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக அவுஸ்ரேலி ய கிரிக்கெட் நடுவர் குழுவில் பணியாற்றி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகளில் நடுவராக இருந்தார். இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இவர் நடுவராக நியமிக்கப்பட்டுளார். ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஜொலிக்கும் வித விதமான பூக்கள்!

அவுஸ்ரேலியாவில் குளிர்காலம் நிறைவு பெற்று வசந்தகாலம் தொடங்கி உள்ளது. அவுஸ்திரேலியாவின் பல நகரங்களிலும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த அவுஸ்திரேலிய அரசு ஆண்டு தோறும் மிகவும் அழகான பூந்தோட்டங்களை உருவாக்கி வித விதமான பூக்களை மக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இந்த வருடமும் அவுஸ்திரேலிய தலைநகரமான காம்பராவில் மக்கள் பார்ப்பதற்காக பல லட்சக்கணக்கான பூ மரங்களை நாட்டி உள்ளார்கள். இந்த நிகழ்வு கடந்த மாதம் 16 ஆம் திகதியில் இருந்து இந்தமாதம் 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பல லட்சக்கணக்கான மக்கள் அவுஸ்திரேலியாவின் ...

Read More »

சிறிலங்காவுக்கு எம்மால் சடலத்தைக் கொண்டுவரமுடியாது – அவுஸ்ரேலியா

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் சடலத்தை சிறிலங்காவுக்கு கொண்டுசெல்வதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. அதனை பப்புவா நியூகினியா அரசாங்கமே மேற்கொள்ளவேண்டுமெனவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் சடலத்தை சிறிலங்காவுக்குக் கொண்டுவருவதற்கு 9ஆயிரம் அவுஸ்ரேலிய டொலரை வழங்குமாறு அவுஸ்ரேலிய தூதரகம் கோரியிருந்ததாக அவரது உறவினரான மதி என்பவரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்த அவுஸ்ரேலிய ஊடகம், மனுஸ் தீவில் உயிரிழந்த ரஜீவ் ராஜேந்திரனின் ...

Read More »

மனுஸ் தீவு தடுப்பு முகாமில் உயிரிழந்த யாழ் இளைஞன்! -கண்டனங்கள்

அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவு தடுப்பு முகாமில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளின் உயிரிழப்பினைத் தடுப்பதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்த 32 வயதான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜீவ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அகதிகள் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அரசு கடைப்பிடிக்கும் கடுமையான கொள்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

Read More »

மனுஸ் தீவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை ஒப்படைக்க 9ஆயிரம் டொலர் கேட்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம்!

மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட தமிழ் இளைஞனின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு 9ஆயிரம் டொலரை அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளதாக குறித்த இளைஞனின் உறவுகள் தெரிவித்துள்ளனர். மனுஸ் தீவில் உள்ள அவுஸ்ரேலியாவின் இடைத்தங்கல் முகாமில், தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 வயதான, ரஜீவ் ராஜேந்திரன் நேற்று அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார். 2013ஆம் அண்டு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் புகுந்த இவர் மனுஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அங்கு தனது உடலுக்கு தானே தீங்கிளைக்க முற்பட்டவேளையில் உளவளச் சிகிச்சைக்காக மனுஸ்தீவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்படாத நிலையில் அவர் தனது ...

Read More »

சிறிலங்கா தம்பதியை நாடுகடத்துகிறது அவுஸ்ரேலியா!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை கோரிய சிறிலங்கா தம்பதியினர் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எரங்க ரணசிங்க ஆராச்சிகே என்ற சிறிலங்காவைச் சேர்ந்தவரின் குடும்பமே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தம்பதியினர் எதிர்வரும் 26 ஆம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் குறித்த தம்பதியினர் அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக பாரியளவில் நிதி செலவிட்டுள்ளதாகவும், இருப்பினும் அவை எவ்வித பலனையும் கொடுக்கவில்லையெனவும் கூறப்படுகிறது..

Read More »