தெற்கு அவுஸ்ரேலிய மாநில தேர்தலில் நிக் செனாஃபோன் அணித் தலைவர் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
கிழக்கு அடிலெய்டின் ஹார்ட்லி தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
ஒரு ஒக்ஸிஜன் தொட்டி இல்லாமல் எவரெஸ்ட் மலை மேல் ஏறுவதைப் போன்று இந்தத் தேர்தல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என கூறினார்.
அத்துடன் தனது சொந்த மாநிலத்தில் அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் மக்கள் தொகை தொடர்ந்த்தும் குறைந்து வரும் நிலையே இவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்கு தூண்டியது என்றார்.
இதேவேளை இரட்டை குடியுரிமைச் சர்ச்சையில் அகப்பட்டுக் கொண்ட ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த உயர்நீதிமன்ற விசாரணைகள் எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகிறது.