அவுஸ்ரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக கிளாரி போலோசாக் என்ற பெண் நடுவராக களமிறங்க உள்ளார்.
அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த கிளாரி போலோசாக் (29) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக அவுஸ்ரேலி ய கிரிக்கெட் நடுவர் குழுவில் பணியாற்றி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரின் 4 போட்டிகளில் நடுவராக இருந்தார்.
இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் நடைபெறும் உள்ளூர் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இவர் நடுவராக நியமிக்கப்பட்டுளார். ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் பெண் நடுவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் கிளாரி பிரபல நடுவரான பால் வில்சனுடன் இணைந்து செயல்படுவார் என கூறப்பட்டுகிறது.
இதுகுறித்து கிளாரி பேசுகையில், ‘நான் கிரிக்கெட் விளையாடியதில்லை. ஆனால் எனக்கு கிரிகெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. என் பெற்றோரின் தூண்டுதல் தான், நான் நடுவர் ஆனதற்கு காரணம். இதுவரை பல முறை நடுவர் தேர்வில் தோல்வியடைந்துள்ளேன். கடின முயற்சிக்கு பின்னரே நடுவர் தேர்வில் வெற்றி பெற்றேன். இந்த போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்’ என கூறினார்.