அவுஸ்ரேலியாவின் இடது கை ‘சைனமேன்’ சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக், 50 வயது வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். இவர் ‘சைனமேன்’ பந்து வீச்சு மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்கியவர். தற்போது 46 வயதாகும் இவர், அவுஸ்ரேலிய சர்வதேச அணியில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் பிக் பாஷ் தொடரில் விளையாடி வருகிறது.
பெர்த் ஸ்காட்சர்ஸ் அணி கடந்த சீசனில் இவரை விடுவித்தது. இருந்தாலும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கடந்த சீசனில் 8 போட்டிகளிலும் விளையாடி 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் பிராட் ஹாக்கின் ஒப்பந்தத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது மெல்போர்ன் ரெனேகட்ஸ்.
மீண்டும் பிக் பாஷ் தொடரில் விளையாட இருக்கும் பிராட் ஹாக், தான் 50 வயது வரை விளையாட இருப்பதாக கூறியுள்ளார்.
46 வயதாகும் பிராட் ஹாக் அவுஸ்ரேலிய அணிக்காக 7 டெஸ்ட், 123 ஒருநாள் மற்றும் 15 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவுஸ்ரேலிய அணிக்காக கடைசியாக 2014-ல் டாக்காவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார்.