அவுஸ்திரேலியமுரசு

NSW-இல் புதிதாக 177 பேருக்கு தொற்று! முடக்கநிலை மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு!!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 177 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்று காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளார். 90 வயதுகளிலுள்ள மூதாட்டி ஒருவரே இவ்வாறு மரணமடைந்ததாகவும் இவருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப்பின்னணியில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை ஆகக்குறைந்தது மேலும் 4 வாரங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் வாழ்பவர்களுக்கான முடக்கநிலை ஆகக்குறைந்தது ஆகஸ்ட் 28ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக Premier ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் பலி!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தீவிபத்தில் நான்கு வயதான தமிழ் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெல்பன் Dandenong பிரதேச வீடொன்றில் இந்த சம்பவம் நேற்று 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் ரித்திஷ் கிருஷ்ணநீதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின் Gas heater மூலம் ஏற்பட்ட தீ, பற்றி எரிந்து வேகமாக வீட்டின் ஏனைய இடங்களுக்கும் பரவியிருக்கிறது. ரித்திஷ் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் போகமுடியாதளவுக்கு வீட்டினை தீ சூழ்ந்து எரிந்திருக்கிறது. ரித்திஷின் தாயார் ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று மகனை காப்பாற்றுவதற்கு முயற்சிசெய்துள்ளார். அவரது ...

Read More »

நியூசவுத் வேல்ஸ் 145 பேருக்கு கோவிட் தொற்று! குயின்ஸ்லாந்தில் புதிதாக ஒருவருக்கு

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 145 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் 100க்கும் அதிகமானோருக்கு தொற்று பதிவாகிவருகிறது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 145 பேரில் 66 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 79 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர்களில் ஆகக்குறைந்தது 51 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பரவலின் முக்கிய புள்ளிகளாக தென்மேற்கு ...

Read More »

Vaccination Passports என்றால் என்ன?

ஆஸ்திரேலிய எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக வெளிநாட்டுப்பயணங்கள் சாத்தியமில்லை என்ற நிலையிலும் Lockdowns – முடக்க நிலை, Border closures – எல்லைகள் மூடப்பட்டிருத்தல், mass event cancellation- திரளானோர் ஒன்று கூடக் கூடிய நிகழ்வுகள் ரத்துச்செய்யப்படுதல், schools closures – பாடசாலைகள் மூடப்பட்டிருத்தல் என்பவற்றுக்கு மீண்டும் எம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய சூழலிலும், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் செளகர்யங்கள் வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஒருநாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குள் நுழைவதற்கான அனுமதியைப்பெற Passports – கடவுச்சீட்டுகள் பயன்படுத்தப்படுவதுபோல, இன்றைய Covid 19 பின்னணியில், ஒரு நாட்டிலிருந்து ...

Read More »

குயின்ஸ்லாந்து விபத்தில் சிறுமியும் தாயும் மரணம்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப்பின்னணி கொண்ட தாயும் மகளும் மரணமடைந்துள்ளனர். இரு மகன்களும் தந்தையும் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்றுமுன்தினம் வியாழன் அதிகாலை 7.20 மணிக்கு இவ்விபத்து சம்பவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த 35 வயதான Lotsy Jose மற்றும் அவரது 6 வயது மகள் Catelyn Rose Bipin ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர். Lotsy Jose, கணவர் Bipin Ouseph மற்றும் 3 பிள்ளைகள் என ஐந்துபேர் அடங்கிய குடும்பம், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Orange பகுதியிலிருந்து ...

Read More »

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் கோவிட்!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த ஆண்டில் ஒரே நாளில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். இதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ளநிலை ஒரு ‘தேசிய அவசரநிலை’ என்பதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant விவரித்துள்ளார். புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 136 பேரில் 77 பேர் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 59 பேருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்பட்டுவருவதாகவும் Premier Gladys Berejiklian தெரிவித்தார். இவர்களில் ஆகக்குறைந்தது 53 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 80% முஸ்லீம்கள் பாகுபாட்டினை அனுபவிக்கிறார்கள்!

முஸ்லிம்கள் நேற்று (21) ஈகைத் திருநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேளையில் நாட்டிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒருவித பாகுபாட்டினை அனுபவித்திருப்பதை ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் கடந்தவாரம் வெளிப்படுத்தியுள்ளது.

Read More »

தமிழ் பெண்ணை ‘அடிமை’யாக வைத்திருந்த வழக்கு: மெல்பன் தம்பதியருக்கு சிறைத்தண்டனை!

தமிழ்ப்பெண் ஒருவரை வீட்டுவேலையாள் என்ற பெயரில் எட்டு வருடங்கள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் மெல்பனைச் சேர்ந்த தமிழ் தம்பதியருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் குறித்த தம்பதியர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தநிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி John Champion இவர்களுக்கான தீர்ப்பினை அறிவித்தார். இதன்படி மனைவிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கணவனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மனைவி ...

Read More »

குணநலன் அடிப்படையில் விசா ரத்து, காலவரையற்ற தடுப்புக்காவல்

ஆஸ்திரேலியாவில் குணநலன் அடிப்படையில் விசா ரத்து செய்யப்படுபவர்கள் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவதாகவும் இந்த முறையை தடுப்பதற்கான போதிய பாதுகாப்புகள் இல்லை என ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையாளர் Rosalind Croucher எச்சரிக்கை தெரிவித்துள்ளார். புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் விசா ரத்து செய்யப்பட்டு தடுப்பில் உள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த எச்சரிக்கையினை அவர் விடுத்திருக்கிறார். புலம்பெயர்வு சட்ட விதி 501-ன் கீழ் குணநலன் அடிப்படையில் அல்லது குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது தவறான செய்கைகளில் ஈடுபடும் குழுவில் உள்ளவராக ...

Read More »

89 பேருக்கு கோவிட் தொற்று! ஒருவர் பலி!

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 89 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணமடைந்துள்ளார். சிட்னியின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுகளிலுள்ள முதியவர் ஒருவரே மரணமடைந்ததாகவும் இவருக்கு ஏற்கனவே தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் மூலம் மரணமடைந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் ஆகக்குறைந்தது 21 பேர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நால்வருக்கும் ...

Read More »