ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் ராயல் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்தனர். பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஒரு தொண்டு ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
ஆஸ்திரேலியா- அமெரிக்கா அகதிகள் ஒப்பந்தம்: மீள்குடியேற்றத்தில் நிராகரிக்கப்படும் அகதிகள்
மனுஸ்தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள், கடந்த 2016ல் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். சமீபத்தில், இப்படி விண்ணப்பித்த 72 சதவீதமான அகதிகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. தற்போது விண்ணப்பித்த 32 அகதிகளில் 9 பேர் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த 9 பேரில் 4 ரோஹிங்கியா, 3 ஆப்கானியர், 2 பாகிஸ்தானியர் மற்றும் 1 ஈழத்தமிழர் எனக்கூறப்படுகின்றது. இதுவரை நவுரு முகாமிலிருந்து 300 அகதிகளும் மனுஸ்தீவிலிருந்து 167 அகதிகளும் என 467 ...
Read More »தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை உயிரோட்டமாக வைத்துள்ளது ஆஸ்திரேலியா. அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை உயிரோட்டமாக வைத்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvSA ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி ...
Read More »அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இன்று இடம்பெற்ற சம்பவங்களை பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் காவல்துறையினரால் சுடப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் அதற்கு முன்னர் வாயு போத்தல்கள் நிரம்பிய தனது காரை வெடிக்க வைத்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை குறிப்பிட்ட நபர் காவல்துறையினர் ...
Read More »அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் கத்திக்குத்து தாக்குதல்!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் நபர் ஒருவர் சற்று முன்னர் பலரை கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார். காவல்துறையினர் சிறிய எண்ணிக்கையானவர்கள் கத்திக்குத்திற்குஇலக்காகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னின் போர்க் வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஸ்வான்ஸ்டன் வீதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது என்ற தகவலை தொடர்ந்து அந்த பகுதிக்கு நாங்கள் சென்றவேளையே இந்த சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் நபர் ஒருவரை கைதுசெய்து காவல்துறை பாதுகாப்புடன் வைத்தியாசாலையில் ...
Read More »ஐரோப்பிய ஒன்றியமும் அவுஸ்திரேலியாவும் வேண்டுகோள்!
சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது நம்பிக்கை வாக்கெடுப்பினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியமும் அவுஸ்திரேலியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன. நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூட்டப்படுவது குறித்த வர்த்தமானி அறிவித்தலை கருத்திலெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும் நோர்வே சுவிட்ஸ்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர். நாடு தற்போது எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலைக்கு முடிவை காண்பதற்காக நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது வாக்கெடுப்பை நடத்துவதற்கு உடனடியாக அனுமதிப்பதன் மூலம் நாடாளுமன்றம் தனது பெரும்பான்மையை நிருபிப்பதற்னு அனுமதிக்கவேண்டும் என தூதுவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த ...
Read More »அவுஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் பயணித்த தொடருந்து!
அஸ்திரேலியாவில் ஓட்டுநரில்லாமல் வேகமாக சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம்புரளச் செய்யப்பட்டு நிறுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சரக்கு தொடருந்து 268 பெட்டிகளைக் கொண்டுள்ளது. அது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சுமார் 1 மணி நேரம் ஓட்டுநரில்லாமல் பயணித்துள்ளது. அந்த தொடருந்து தடம் புரண்டதில் சுமார் 1,500 மீட்டர் ரயில் தண்டவாளம் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.அந்த ரயில் சுரங்க நிறுவனமான BHPக்குச் சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக ஒருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. ஓட்டுநரில்லா தொடருந்தில் விபத்து நேரக்கூடுமென அஞ்சிய ...
Read More »மெல்பேர்ன் கிண்ண குதிரைப் பந்தயப் போட்டி!
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் கிண்ண குதிரைப் பந்தயப் போட்டியில் Cross Counter என்ற குதிரை வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை Marmelo பெற்றுக்கொண்டது. அதேநேரம் A Prince of Arran என்ற குதிரை மூன்றாம் இடத்தைப் பிடித்தது. மெல்பேர்ன் கிண்ண குதிரைப்பந்தயப் போட்டியானது அவுஸ்திரேலியாவையே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைக்கும் போட்டி என வர்ணிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Read More »நவுறு சிறுவர்களை அவுஸ்திரேலியா என்றும் ஏற்காது!
நவுறு சிறுவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் இடம் கிடையாது என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் திட்டவட்டமாக கூறியுள்ளார். நவுறுவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அகதிச்சிறுவர்கள் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட பின் மீண்டும் நவுறு தீவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நவுறு தீவிலுள்ள அகதிச்சிறுவர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே அமைச்சர் பீட்டர் டட்டன் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.
Read More »அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட அசம்பாவிதம்!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் சம்பவத்தில் பல வர்த்தக நிலையங்களும் தொழிற்சாலை கட்டிடம் ஒன்றும் தீக்கிரையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. சுமார் 100 தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீயின் காரணமாக தொழிற்சாலை கட்டிடங்களுக்குள் உள்ள போத்தல்களும், பிற பொருட்களும் வெடித்துச் சிதறுவதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
Read More »