நவுறு சிறுவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் இடம் கிடையாது என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
நவுறுவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அகதிச்சிறுவர்கள் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்ட பின் மீண்டும் நவுறு தீவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர்த்தப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நவுறு தீவிலுள்ள அகதிச்சிறுவர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையிலேயே அமைச்சர் பீட்டர் டட்டன் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal