சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது நம்பிக்கை வாக்கெடுப்பினை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியமும் அவுஸ்திரேலியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூட்டப்படுவது குறித்த வர்த்தமானி அறிவித்தலை கருத்திலெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களும் நோர்வே சுவிட்ஸ்சர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.
நாடு தற்போது எதிர்கொள்ளும் நிச்சயமற்ற நிலைக்கு முடிவை காண்பதற்காக நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது வாக்கெடுப்பை நடத்துவதற்கு உடனடியாக அனுமதிப்பதன் மூலம் நாடாளுமன்றம் தனது பெரும்பான்மையை நிருபிப்பதற்னு அனுமதிக்கவேண்டும் என தூதுவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்தில் மேலும் தாமதங்கள் ஏற்பட்டால் சிறிலங்காவின் சர்வதேச கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை பாதிக்கலாம் என தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது பெரும்பான்மையை நிருபிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படாது என்பது குறித்து அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்செசன் கவலை வெளியிட்டுள்ளார்.