கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர்ப்பகுதியான ரோவில்லே பகுதியில் ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையம் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு பரிசாக கொடுத்த அந்த சிலையை, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தூதர் ராஜ்குமார் மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால், ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் உயிரிழப்பு
பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் உயிரிழப்பு கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் பருவகால தொழிலாளர்கள் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் உள்ள பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்த 16 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அத்துடன் இத்தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் சுரண்டல்களுக்கு உள்ளாவதாகவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளை எதிர்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன
Read More »மெல்பேர்ன் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்ட அகதி டான் கான் விடுதலை!
ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் பார்க் ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதியான டான் கான் இன்று விடுதையாகிறார் என முன்னாள் தடுப்பு முகாம்வாசி பர்ஹத் பண்டேஷ் டீவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எந்த வித குற்றமும் செய்யாத டான் கான் எட்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய தடுப்பில் வைக்கப்பட்டிருந்ததாக பர்ஹத் குறிப்பிட்டுள்ளார்.
Read More »திறக்கப்படும் எல்லைகள்: கம்போடிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் ஆஸ்திரேலியா
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கம்போடிய நாட்டு எல்லைகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கம்போடியாவும் ஆஸ்திரேலிய தூதரகமும் இணைந்து நவம்பர் 2 முதல் 25 வரை கம்போடிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குகிறது. “கொரோனா தடுப்பூசிகள் குறித்து புரிந்து கொள்ள, தற்போதைய புலம்பெயர்வு போக்குகள் மற்றும் வாய்ப்புகள், மனித கடத்தல், முகங்களை ஒப்பிட்டு பார்க்கும் முறைகள் குறித்து குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்,” என கம்போடிய குடிவரவுத்துறை பேச்சாளர் General Keo Vanntha தெரிவித்துள்ளார்.
Read More »ஆஸ்திரேலியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
ஆஸ்திரேலியாவில் முதலாவது சுற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை இன்றையதினம் 90 சதவீதத்தை எட்டுவதால், இன்றையநாள் மிக முக்கியமான மைல்கல் எட்டப்படும் நாளாக பதிவாகிறது என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்தார். Moderna-வின் mRNA கோவிட்-19 தடுப்பூசியான SPIKEVAX-ஐ, 6-11 வயதுக்குட்பட்டவர்கள் போட்டுக்கொள்வதற்கான தற்காலிக ஒப்புதலை Therapeutic Goods Administration வழங்கியுள்ளது. கோவிட் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான தொடர்புகளைக் கண்டறியமுடியாதுபோனால், Gold Coast-இல் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார். ACT-இல் கோவிட் தொற்றுக்குள்ளான 33 பேர் கன்பராவில் இடம்பெற்ற சட்டவிரோத ...
Read More »குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும்?
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்களுக்குக் கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை எட்டியவுடன், அல்லது டிசம்பர் 17ஆம் தேதிக்குப் பின்னர் pubகள் மற்றும் பொழுதுபோக்கு அரங்குகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்படும். தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியும். அவசரகால சூழ்நிலைகள் அல்லது உயிர் போகும் சூழலில் மட்டுமே அதற்கு விதிவிலக்கு வழங்கப்படும். தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதத்தை அடைந்த பின்னர், குயின்ஸ்லாந்து மாநிலத்தவர்கள் ...
Read More »வேதனையில் ஆஸ்திரேலிய குடும்பங்கள்
வரும் பிப்ரவரி 2022 வரை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திற்குள் வெளிநாட்டிலிருந்து வருபவர்களோ ஆஸ்திரேலியாவின் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களொ அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனும் அறிவிப்பு குடும்பங்களை பிரிந்துள்ள ஆஸ்திரேலியர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 90% சதவீதத்தை எட்டிய பின்னர் தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அம்மாநிலத்தின் Premier Mark McGowan தெரிவித்துள்ளார்.
Read More »ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. மார்ச் 2021 முதல் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 51 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது என சர்வதேச மாணவர் சேர்ப்பு நிறுவனமான Adventus தெரிவித்துள்ளது.
Read More »தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீத இலக்கை எட்டியது
ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் என்று உயர்ந்துள்ளது. “மற்றொரு அற்புதமான இலக்கை எட்டியுள்ளோம்” என்று பிரதமர் இன்று காலை தெரிவித்தார். 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதமானோர் இப்போது COVID-19 தடுப்பூசியை முழுமையாகப் போடப்பட்டுள்ளனர் என்று பிரதமர் Scott Morrison கூறினார். “அனைவருக்கும் மிக்க நன்றி. இது ஒரு பாரிய, தேசிய முயற்சி. இந்தப் பணி இத்துடன் ஓயவில்லை. விகிதாசார அடிப்படையில், தடுப்பூசியை அதிகம் போட்டுக் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் முதன்மை நிலையை நாம் ...
Read More »ஆஸ்திரேலியாவில் மாயமான சிறுமி 18 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் என்ற 4 வயது சிறுமி கடந்த மாதம் 16-ந் தேதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போனாள். இந்த சிறுமியைத் தேடி பெரியதொரு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிறுமியை பற்றிய தகவல் தருவோருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5 கோடியே 62 லட்சம்) ...
Read More »