கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கம்போடிய நாட்டு எல்லைகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், கம்போடியாவும் ஆஸ்திரேலிய தூதரகமும் இணைந்து நவம்பர் 2 முதல் 25 வரை கம்போடிய குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குகிறது.
“கொரோனா தடுப்பூசிகள் குறித்து புரிந்து கொள்ள, தற்போதைய புலம்பெயர்வு போக்குகள் மற்றும் வாய்ப்புகள், மனித கடத்தல், முகங்களை ஒப்பிட்டு பார்க்கும் முறைகள் குறித்து குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு பயிற்றுவிக்கப்படும்,” என கம்போடிய குடிவரவுத்துறை பேச்சாளர் General Keo Vanntha தெரிவித்துள்ளார்.