ஆஸ்திரேலியாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
- ஆஸ்திரேலியாவில் முதலாவது சுற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை இன்றையதினம் 90 சதவீதத்தை எட்டுவதால், இன்றையநாள் மிக முக்கியமான மைல்கல் எட்டப்படும் நாளாக பதிவாகிறது என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்தார்.
- Moderna-வின் mRNA கோவிட்-19 தடுப்பூசியான SPIKEVAX-ஐ, 6-11 வயதுக்குட்பட்டவர்கள் போட்டுக்கொள்வதற்கான தற்காலிக ஒப்புதலை Therapeutic Goods Administration வழங்கியுள்ளது.
- கோவிட் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான தொடர்புகளைக் கண்டறியமுடியாதுபோனால், Gold Coast-இல் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.
- ACT-இல் கோவிட் தொற்றுக்குள்ளான 33 பேர் கன்பராவில் இடம்பெற்ற சட்டவிரோத Halloween party-உடன் தொடர்புபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
- டாஸ்மேனியாவிலுள்ள 80 சதவீதமானோர் கோவிட் தடுப்பூசியை முழுமையாக பெற்றுள்ளனர்.
- ஆஸ்திரேலியாவுடனான எல்லைகளை Fiji மீண்டும் திறந்துள்ள அதேநேரம் Fiji கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், சிறப்பு அனுமதி வைத்திருப்போர்(இவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்) மற்றும் நாடு திரும்பும் Fiji குடியிருப்பாளர்கள், டிசம்பர் 1ம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடற்ற பயணத்தை மேற்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்தெரிவு 2021-11-11