தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீத இலக்கை எட்டியது

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் என்று உயர்ந்துள்ளது. “மற்றொரு அற்புதமான இலக்கை எட்டியுள்ளோம்” என்று பிரதமர் இன்று காலை தெரிவித்தார்.

6 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதமானோர் இப்போது COVID-19 தடுப்பூசியை முழுமையாகப் போடப்பட்டுள்ளனர் என்று பிரதமர் Scott Morrison கூறினார்.

“அனைவருக்கும் மிக்க நன்றி. இது ஒரு பாரிய, தேசிய முயற்சி. இந்தப் பணி இத்துடன் ஓயவில்லை. விகிதாசார அடிப்படையில், தடுப்பூசியை அதிகம் போட்டுக் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் முதன்மை நிலையை நாம் எட்ட இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

“தடுப்பூசி போட்டுக் கொண்டு, அதிகமானவர்கள் பாதுகாக்கப் படுவதால், நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம், எனவே நீங்கள் ஏற்கனவே தடுப்பூசி போடவில்லை, தயவுசெய்து விரைவில் தடுப்பூசி போடுங்கள். பாதுகாப்பாக மீண்டும் எல்லைகளைத் திறக்கவும், பாதுகாப்பாகத் திறந்திருக்கவும் எங்கள் எல்லோருக்கும் உதவும்.”

இதற்கிடையில், தொற்று அதிகமாகப் பரவக் கூடிய மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் போன்ற இடங்களில் தொழில் புரிபவர்கள் மற்றும் அங்கு செல்பவர்களுக்கு தொற்று இருக்கிறதா என்று விரைவில் கண்டறியக் கூடிய அன்டிஜன் சோதனைகள் செய்வது குறித்த ஒரு நாடளாவிய திட்டம் உருவாக்கப் படுகிறது. இதற்கு National cabinet ஆதரவு வழங்கியுள்ளது.