அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலிய அரசினால் நாடு திரும்புவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பில் வழக்கு தாக்கல்

அவுஸ்திரேலியா – மெல்பன் பகுதியினை சேர்ந்த நபரொருவரினால் இந்தியாவிலிருந்து மீண்டும் நாடு திரும்புவதற்கு அரசினால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவில் சிக்கியுள்ள மெல்பன் குடியிருப்பாளரான 73 வயதான Gary Newman என்பவரே இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் 14 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்ததால், அங்கிருந்து நாடு திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து, அவர் அரசின் மேல் வழக்கு தொடுத்துள்ளார். அரசின் தடை உத்தரவானது அவரது தனியுரிமை மீறல் என்று இதன்போது அவரது வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். இந்நிலையில், தேசிய ...

Read More »

ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர்-சிலாட்டர் மாலத்தீவு மதுபாரில் சண்டை?

ஐ.பி.எல்.லில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேரை கிரிக்கெட் வாரியம் மாலத்தீவுக்கு அனுப்பி வைத்தது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த முடிவை எடுத்தது. இதைத்தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் விளையாடி வந்த வெளிநாட்டு வீரர்களை அவர்களது நாட்டுக்கு கிரிக்கெட் வாரியம் பத்திரமாக அனுப்பி வைத்தது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேச வீரர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பி இருந்தனர். இந்திய பயணிகள் ...

Read More »

சர்வதேச எல்லைகள் எப்போது திறக்கப்படும் – ஆஸ்திரேலியா மந்திரி விளக்கம்

ஆஸ்திரேலியாவில் புதிதாக 21 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டன. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி விடக்கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனமாக உள்ளது. இதனால் தனது நாட்டின் சர்வதேச எல்லையை முழுமையாக திறக்காமல் உள்ளது. இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் வர்த்தக மந்திரி டேன் தெஹான் ...

Read More »

கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினரை சமூகத்திற்குள் நடமாட அனுமதிப்பது குறித்து ஆராய்கின்றேன்

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினரை கிறிஸ்மஸ் தீவுவிற்குள்ளேயே சமூகத்திற்குள் தங்கியிருப்பதற்கு அனுமதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் கரென் அன்றூஸ் தெரிவித்துள்ளார். தமிழ்குடும்பத்தின் நலன்கள்குறித்து ஆராய்ந்துவருவதாகதெரிவித்துள்ள அவர் அவர்களிற்கானதங்குமிடம் குறித்து ஆராய்;ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் குடும்பத்தினரின் நலன்கள் குறித்து தனது மனதை திருப்பியுள்ளதாக ஏபிசிக்கு தெரிவித்துள்ள அமைச்சர் கிறிஸ்மஸ் தீவிற்குள் அவர்களிற்கான வேறு இடம் குறித்து ஆலோசனைகளை பெறுவதாக தெரிவித்துள்ளார். நடேஸ் முருகப்பனையும் அவரது மனைவி பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது பிள்ளைகளான கோபிகா தருணிகாவையும் அதிகாரிகள் குயின்ஸ்லாந்தின் ...

Read More »

இந்து கடவுளை சித்தரித்து அவுஸ்திரேலியாவில் வெளியான கேலிச்சித்திரம்

அவுஸ்திரேலியாவில் நாளிதழொன்றில் வெளியான கேலிச்சித்திரமொன்று இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும், இது தொடர்பில் குறித்த ஊடகம் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் இந்நாட்டிலுள்ள இந்து அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் The Daily Telegraph-இல் மே மாதம் 4ம் திகதி வெளியான செய்திக்கட்டுரையிலேயே குறித்த கேலிச்சித்திரம் இடம்பெற்றுள்ளது. இந்துக் கடவுள்களில் ஒருவரான விநாயகரை இழிவுபடுத்தும் வகையில் கேலிச்சித்திரம் அமைந்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன்,கேலிச்சித்திரம் தொடர்பில் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்கலாச்சார சமூகங்கள் வாழும் அவுஸ்திரேலியாவில் எந்தவொரு நம்பிக்கையையும், ...

Read More »

அவுஸ்திரேலிய வீரர்களை இலங்கை அழைத்து வர திட்டம்?

இந்தியாவில் IPL கிரிக்கெட் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் உள்ளிட்டவர்களை இலங்கை அல்லது மாலைத்தீவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடர்பில் இன்று தகவல் வௌியானது. அவுஸ்திரேலியா ஏற்கனவே இந்தியாவில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க 15 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது. IPL கிரிக்கெட் தொடரில் 23 அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஏற்கனவே மைக் ஹசீயிற்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர்பில் கலந்துகொண்ட வேறு நாடுகளின் வீரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு ...

Read More »

‘ஆஸி. பிரதமரே! உங்கள் கரங்களில் ரத்தக்கறை படிந்துள்ளது’

ஐபிஎல் டி20 தொடரில் வர்ணனையாளராகப் பணிபுரிந்து வந்த ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லாடர், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பைப் பார்த்து, பயோ-பபுளில் இருந்து விலகி மாலத்தீவு சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலிருந்து வரும் ஆஸ்திரேலிய குடிமகன்கள் யாரும் மே 15-ம் தேதிவரை ஆஸ்திரேலியாவுக்குள் வரக்கூடாது என பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார். விமானச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்துதானே விமானங்கள் வரக்கூடாது, ஆஸ்திரேலியர்கள் வரக்கூடாது, மாலத்தீவிலிருந்து வரலாமே என்பதால், மைக்கேல் ஸ்லாடர் மாலத்தீவு சென்றதாக ஆஸ்திேரலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...

Read More »

இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ரூ.37 லட்சம் கொரோனா நிதி உதவி

கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறி வருகிறது. கொரோனா 2-வது அலையின் தாக்கம் இந்தியாவில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. தினசரி பாதிப்பு நாள்தோறும் உயர்ந்த வண்ணமாய் உள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் இந்தியா திணறுகிறது. பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு கொரோனா உதவிகளை அளித்து வருகிறது. இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அந்த நாட்டு யுனிசெப் அமைப்பும் இணைந்து இந்தியாவுக்கு ...

Read More »

சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து வந்த கப்பலில் இருந்த 12 பேர் புகலிடக் கோரிக்கை!

சீனாவிலிருந்து குயின்ஸ்லாந்து துறைமுகத்தை வந்தடைந்த கால்நடைகளை ஏற்றிச் செல்லும் கப்பலில் இருந்து குதித்து Townsville பிரதேசத்துக்குள் தப்பிச்சென்றதாக கூறப்படும் கப்பல் பணியாளர் ஒருவர், பொலீஸாரிடம் சரணடைந்து தனக்கு ஆஸ்திரேலிய அரசு தஞ்சமளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவருடன் கப்பலில் வந்த இன்னும் பதினொரு பேரும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பதினொரு பேரும் குறிப்பிட்ட கப்பலில் பணிபுரிந்த சிரிய நாட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை குயின்ஸ்லாந்து Townsville துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் துறைமுகத்திலிருந்து ஏப்ரல் ...

Read More »

பயணத்தடை: இந்தியாவுக்கு எதிரான இனவாத அறிவிப்பா?

நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடுகளை மீறி இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருப்பது இனவாதம் சார்ந்தது அல்ல என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் கூறியுள்ளர். அரசாங்கத்தின் அறிவிப்பு இந்தியர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார். இந்தியாவில் கோவிட் பரவல் கொடூரமான அளவில் செறிவடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் மீண்டும் தாயகத்துக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி – பயண ஓட்டைகளை பயன்படுத்தி – யாராவது ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்தால், அவர்களுக்கு 60 ஆயிரம் டொலர்கள் வரையிலான ...

Read More »