இந்தியாவில் IPL கிரிக்கெட் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் உள்ளிட்டவர்களை இலங்கை அல்லது மாலைத்தீவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடர்பில் இன்று தகவல் வௌியானது.
அவுஸ்திரேலியா ஏற்கனவே இந்தியாவில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க 15 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது.
IPL கிரிக்கெட் தொடரில் 23 அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஏற்கனவே மைக் ஹசீயிற்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடர்பில் கலந்துகொண்ட வேறு நாடுகளின் வீரர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு COVID தொற்று உறுதியாகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து வருவோரை இலங்கையில் தனிமைப்படுத்தும் திட்டம் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற நிலையிலேயே IPL போட்டித் தொடரில் கலந்துகொண்டவர்களை இலங்கைக்கு அழைத்துவரும் முயற்சி குறித்து தகவல் வௌியாகியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal