கிறிஸ்மஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினரை சமூகத்திற்குள் நடமாட அனுமதிப்பது குறித்து ஆராய்கின்றேன்

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பத்தினரை கிறிஸ்மஸ் தீவுவிற்குள்ளேயே சமூகத்திற்குள் தங்கியிருப்பதற்கு அனுமதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக உள்துறை அமைச்சர் கரென் அன்றூஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்குடும்பத்தின் நலன்கள்குறித்து ஆராய்ந்துவருவதாகதெரிவித்துள்ள அவர் அவர்களிற்கானதங்குமிடம் குறித்து ஆராய்;ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குடும்பத்தினரின் நலன்கள் குறித்து தனது மனதை திருப்பியுள்ளதாக ஏபிசிக்கு தெரிவித்துள்ள அமைச்சர் கிறிஸ்மஸ் தீவிற்குள் அவர்களிற்கான வேறு இடம் குறித்து ஆலோசனைகளை பெறுவதாக தெரிவித்துள்ளார்.

நடேஸ் முருகப்பனையும் அவரது மனைவி பிரியா மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது பிள்ளைகளான கோபிகா தருணிகாவையும் அதிகாரிகள் குயின்ஸ்லாந்தின் நகரிலிருந்து ஆயிரம் நாட்களிற்கு முன்னர் கொண்டு சென்றனர்

அவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதை நீதிமன்ற உத்தரவு தடை செய்ததை தொடர்ந்து அந்த குடும்பத்தை 2019 முதல் அதிகாரிகள் அவுஸ்திரேலியாவில் தடுத்துவைத்துள்ளனர்.

கிறிஸ்மஸ்தீவில் பாதுகாப்பின் கீழ் இரு அறைகள் கொண்ட தொடர்மாடியில் அதிகாரிகள் அவர்களை தடுத்துவைத்துள்ளனர்.

தமிழ்குடும்பத்தவர்களிற்கு அவர்களது மகளை பாடசாலைக்கு அழைத்து செல்வதற்காகவும் மைதானங்களிற்கு செல்வதற்காகவும் மாத்திரம் வெளியே செல்வதற்கு அதிகாரிகள் அனுமதிவழங்குகின்றனர்.

இதற்கும்அவுஸ்திரேலிய எல்லை காவல்படையினரின் முன்கூட்டிய அனுமதி அவசியம்.