அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் கைது!

சட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2013ல் முதல் நடைமுறையில் உள்ள கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையின் கீழ் படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுக்கப்பட்டனர். இவ்வாறு தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட 78 நடவடிக்கைகளில் 2,525 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் ஓகஸ்ட் மாதம் வரை எடுக்கப்பட்ட 10 நடவடிக்கைகளில் 297 பேர் தடுக்கப்பட்டுள்ளதாக ...

Read More »

ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி!

மோரிஸ், இங்கிடி ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால், கோல்ட் கோஸ்ட் நகரில் இன்று நடந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்க அணி. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் தோல்வி தொடர்கிறது. ஏற்கெனவே கடைசி 3 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த ஆஸ்திரேலிய அணி 4-வதாக இந்தப் போட்டியிலும் தோற்றுள்ளது. ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 6 போட்டிகளிலும் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சும் மிக மோசமாக அமைந்துள்ளது. அடுத்த வாரம் இந்திய ...

Read More »

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்!

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள ...

Read More »

36 இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையை சேர்ந்த 36 பேருக்கு அவுஸ்திரேலியாவில் கல்விசார் புலமைப்பரிசில்கள் கிடைத்துள்ளன. இந்த திட்டத்தின் கீழ் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகத்தின் பொருளாதார அபிவிருத்தி, பால்நிலை சமத்துவம் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்ட பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் புறூஸ் நெவேசரின் தலைமையில் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. 2020ஆம் ஆண்டுக்கான இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் தொடர்பான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் ...

Read More »

நத்தையை உட்கொண்ட அவுஸ்திரேலியா நாட்டு வாலிபர் மரணம்!

மூல வியாதிக்காரர்கள் நத்தையை மருந்தாக உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். நத்தையை முறையாக சமைக்காது, இறைச்சியை உட்கொண்டால் மிகப்பெரிய ஆபத்தான நிலையை அடைவீர்கள் என்பதற்கு அவுஸ்திரேலியா நாட்டு வாலிபர் சிறந்த உதாரணம். ஒரு முறை நண்பர்கள் விட்ட சவாலுக்காக தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையை உட்கொண்ட சாம் பல்லார்டு என்பவர் பல்வேறுபட்ட பாதிப்புக்குள்ளாகி, 8 வருடங்களுக்குப் பின்னர் மரணமாகியுள்ளார். நத்தையை சாப்பிட்ட உடனேயே அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்களின் கவனிப்பில் ஆரோக்கியம் அடைந்தவர், பின்னர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவரால் நீண்ட காலம் ...

Read More »

‘ஆஸியில் ஸ்மித், வார்னர் இல்லாதது இந்திய அணியில் கோலி, ரோஹித் இல்லாதது போன்றது’!- சவுரவ் கங்குலி

ஆஸ்திரேலிய அணியில் டேவிட்ர் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இல்லாதது இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாததற்கு சமம் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் சிக்கினார்கள். இதில் பான்கிராப்ட்டுக்கு 9 மாதம் கிரிக்கெட் விளையாடத் தடையும், ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டுதடையும் விதிக்கப்பட்டது. இதில் வார்னர், ஸ்மித்துக்கு தடை ...

Read More »

6 பேரைக் கொன்ற நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது!

அஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காரை ஏற்றி 6 பேரைக் கொன்ற நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெல்பர்னின் போர்க் ஸ்டிரீட் பகுதியில் இந்த (Bourke Street) சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28 வயது ஜேம்ஸ் கர்கஸூலஸ் (James Gargasoulas) என்பவர் வீதியில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது காரை ஏற்றி பலரை கொலை செய்தார். அதில் 6 மாத சிசு உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் மீது 33 குற்றங்கள் சுமத்தப்பட்டன. எனினும் ஜேம்ஸ் தனது குற்றங்களை மறுத்துள்ளார். ...

Read More »

`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்?’ – ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

ஆஸ்திரேலியா மக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் நேற்று(12) ஆஜர்படுத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குயின்ஸ்லாந்துப் பகுதியில், ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழங்களைச் சாப்பிட்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் சுமார் 100 பேர் தாங்கள் வாங்கிய ஸ்ட்ராபெர்ரி பழங்களிலும் ஊசி இருந்ததாகப் புகார் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பியதால், ஸ்ட்ராபெர்ரி விற்பனையும் தடைபட்டது. இந்த ...

Read More »

ஆஸ்திரேலிய மக்கள் மௌன அஞ்சலி!

முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான நேற்று(11) உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். முதல் உலகப் போர் என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பெரும்போரினில் உலகம் தழுவிய அளவில் பல நாடுகள் பங்கேற்ற போதிலும், பெரும்பாலும் இந்தப் போர் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இதில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ...

Read More »

ஆஸி. மக்களை அச்சுறுத்திய விவகாரத்தில் புதிய திருப்பம்!

ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாத காலமாக பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய ஸ்ட்ராபெர்ரி விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு மாதங்களாக, ஸ்ட்ராபெர்ரி பற்றிய அச்சம் பொதுமக்களிடம் அதிகமாகிக்கொண்டே சென்றது. பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் ஆஸிதிரேலிய அரசும் திணறியது. பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்ட காரணம், அந்தப் பழங்களில் காணப்பட்ட ஊசி தான். கடந்த செப்டம்பர் மாதம் முதல் அந்நாட்டில் விற்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஊசிகள் இருப்பது கண்டு பொதுமக்கள் அச்சம் கொண்டனர். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது கடந்த செப்டம்பர் ...

Read More »