அஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காரை ஏற்றி 6 பேரைக் கொன்ற நபரின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மெல்பர்னின் போர்க் ஸ்டிரீட் பகுதியில் இந்த (Bourke Street) சம்பவம் இடம்பெற்றுள்ளது.
28 வயது ஜேம்ஸ் கர்கஸூலஸ் (James Gargasoulas) என்பவர் வீதியில் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது காரை ஏற்றி பலரை கொலை செய்தார்.
அதில் 6 மாத சிசு உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய நபர் மீது 33 குற்றங்கள் சுமத்தப்பட்டன.
எனினும் ஜேம்ஸ் தனது குற்றங்களை மறுத்துள்ளார். ஆனால், தமது செயலுக்காக வருத்தப்படுவதாகவும் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். சில நாட்களுக்கு முன் மெல்பர்ன் நகரின் அதே இடத்தில், பொதுமக்கள் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய நபர் வர் ஒருவர் அதிகாரிகளால் சுடப்பட்டார்.
சாலைகளில் நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க, ஆஸ்திரேலிய அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
Eelamurasu Australia Online News Portal