இலங்கையை சேர்ந்த 36 பேருக்கு அவுஸ்திரேலியாவில் கல்விசார் புலமைப்பரிசில்கள் கிடைத்துள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகத்தின் பொருளாதார அபிவிருத்தி, பால்நிலை சமத்துவம் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்ட பட்டப்பின் படிப்பு பாடநெறிகளை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கையில் உள்ள – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் புறூஸ் நெவேசரின் தலைமையில் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.
2020ஆம் ஆண்டுக்கான இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் தொடர்பான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை உள்ள காலப்பகுதியில், அனுப்பி வைக்கலாம் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த புலமைப்பரிசில் தொடர்பான மேலதிக தகவல்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
Eelamurasu Australia Online News Portal