மூல வியாதிக்காரர்கள் நத்தையை மருந்தாக உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். நத்தையை முறையாக சமைக்காது, இறைச்சியை உட்கொண்டால் மிகப்பெரிய ஆபத்தான நிலையை அடைவீர்கள் என்பதற்கு அவுஸ்திரேலியா நாட்டு வாலிபர் சிறந்த உதாரணம்.
ஒரு முறை நண்பர்கள் விட்ட சவாலுக்காக தரையில் ஊர்ந்துசென்ற கூடில்லா நத்தையை உட்கொண்ட சாம் பல்லார்டு என்பவர் பல்வேறுபட்ட பாதிப்புக்குள்ளாகி, 8 வருடங்களுக்குப் பின்னர் மரணமாகியுள்ளார்.
நத்தையை சாப்பிட்ட உடனேயே அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர்களின் கவனிப்பில் ஆரோக்கியம் அடைந்தவர், பின்னர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் அவரால் நீண்ட காலம் வாழ முடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அவர் மரணமாகியுள்ளார்.
இந்த நிலையில், இவரது மரணத்திற்கு நத்தையின் உடலில் இருந்த நுரையீரல் புழுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.