சட்டவிரோதமாக ஆபத்தான படகு வழி மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற ஈழத்தமிழ் அகதிகள் 489 கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களைத் தடுக்கும் திட்டத்தினை அவுஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த 2013ல் முதல் நடைமுறையில் உள்ள கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையின் கீழ் படகு வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றவர்கள் தடுக்கப்பட்டனர்.
இவ்வாறு தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட 78 நடவடிக்கைகளில் 2,525 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு முதல் ஓகஸ்ட் மாதம் வரை எடுக்கப்பட்ட 10 நடவடிக்கைகளில் 297 பேர் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த படகுப்பயண முயற்சிகள் இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து முயற்சிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த செப்டம்பர் 2013 முதல் ஆட்கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 614 பேர் கைதாகியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
மேலும் அதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் நடைபெற்றுள்ளது.
அத்துடன் இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				