இலங்கையைச் சேர்ந்த யுவதியொருவரை அவுஸ்திரேலியாவில் விபத்திற்குள்ளாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை அவுஸ்திரேலியாவின் விக்டோரியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மெர்பேர்ன், கிளெடன் பகுதியிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடந்த 29 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நிஷாலி பெரேரா என்ற 20 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்தார். அதிவேகமாக வந்த கார் ஒன்று வெலிங்டன், சீனெக் புலேவட் பகுதியில் வீதியைக் கடந்துகொண்டிருந்த மாணவியை மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதன் பின்னர் விபத்தினை ஏற்படுத்திய கார், சம்பவம் நடைபெற்று ஒரு ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
எனது குடும்பத்தினர் மீது கருணை காண்பியுங்கள்!- பிரியா
கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது குடும்பத்தினர் மீது கருணை காண்பித்து தங்களை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்குமாறு பிரியா பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். கிறிஸ்மஸ் தீவிலிருந்து எஸ்பிஎஸ் தமிழ்ச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தனது குடும்பத்தினர் சமீபத்தில் சந்தித்துள்ள துயரத்தின் சுமையை தான் உணர்வதாக தெரிவித்துள்ள அவர் தாங்கள் வாழ்ந்த குயின்ஸ்லாந்தின் சிறிய நகரிற்கு எப்போது மீண்டும் திரும்பலாம் என்பது குறித்து குழந்தைகள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ,ஆகவே அவர் ...
Read More »தமிழ்க் குடும்பம் நாடு கடத்தல் ; அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம்!
ஒரு தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிறந்த 4 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களே கடந்த அண்மையில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு வலுக்கட்டாயமாக நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னர் விமானம் புறப்பட்ட நிலையில் ...
Read More »கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரியா குடும்பம்!
மெல்பேர்னில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கை கடைசிநேரத்தில் தடுக்கப்பட்டு டார்வினில் தங்கவைக்கப்பட்டிருந்தநிலையில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவிலிருந்து குறித்த குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலை தடுப்பதற்காக போராடும் home to Bilo குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு ...
Read More »தமிழ்க்குடும்பத்திற்கு ஆதரவாக தேசிய அளவில் கவனயீர்ப்பு நிகழ்வு!
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்த தமிழ்க்குடும்பத்தின் அகதிக்கோரிக்கையை நிராகரித்து சிறிலங்காவுக்கு நாடுகடத்த வெளியேற்ற முற்பட்டபோது நீதிமன்றத்தின் ஊடாக எதிர்வரும் புதன்கிழமை வரை தடுக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இக்குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று மீளவும் சுதந்திரமாக வாழவிடுமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தனித்தனியே வெவ்வேறு படகுகளில் அவுஸ்திரேலியா வந்த பிரியா மற்றும் நடேஸ் ஆகியோர் தமது அகதி தஞ்சகோரிக்கையை முன்வைத்த சமூகத்தில் வாழ்ந்துவந்த நிலையில் திருமணமாகி குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழ்ந்துவந்தனர். இவர்களுக்கு தற்போது இரண்டு மற்றும் ...
Read More »பிரியாவை இழுத்துச்சென்றனர்,அவர் கதறினார்! இரு குழந்தைகளும் கதறினார்கள்!
ஈழ தமிழ் தம்பதியினரை அவர்களது குழந்தைகளுடன் இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈழ தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என கோரி போரடி வரும் ஹோம் டு பைலோ அமைப்பு தனது டுவிட்டர் மற்றும் முகநூல்களில் இதனை தெரிவித்துள்ளது. நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்- ஆதரவாளர்கள் விமானநிலையம் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு வயது ...
Read More »அவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் தீக்குளித்த அகதி !
நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த 36 வயது பாகிஸ்தான் அகதி தீக்குளித்த நிலையில், அவுஸ்திரேலிய வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தீக்குளித்த அவர் உயிருக்கு ஆபத்தான சூழலில் நவுருத்தீவிலிருந்து விமானம் வழியாக பிரிஸ்பேனுக்கு (அவுஸ்திரேலியா) அழைத்து செல்லபட்டார் என அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளார். நவுருவில் உள்ள 300 க்கும் மேற்பட்ட அகதிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் ஐன் ரிண்டோல். கடந்த 2016ம் ஆண்டு, தீக்குளித்த ஈரானிய அகதி முறையான ...
Read More »அவுஸ்திரேலியாவில் மகளை கொன்ற தாய்!
அவுஸ்திரேலியாவில் மகளை, தாயே கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் உயிரிழந்த சிறுமி குறித்து அவரின் தந்தை மனம் உருக பேசியுள்ளார். New South Wales-ஐ சேர்ந்தவர் நாதன் காடர்ன்ஸ். இவர் மனைவி தமரி குர்னே. தம்பதிக்கு லைலா (3) என்ற மகள் உள்ளார். நாதனுக்கும், குர்னேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். லைலா தாயுடன் இருந்த வந்த நிலையில் கடந்த யூலை 31ஆம் திகதி முதல் தந்தையுடன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தந்தையிடம் வந்த அடுத்தநாள் அதாவது ...
Read More »60 ஆயிரம் தேனீக்களுடன் தேன் கூடு மீட்பு!
அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 50 கிலோகிராம் தேன் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தேனீ வளர்பாளரான போல் வூட் என்பவர் பிறிஸ்பேன் நகரின் சுபுர்பன் எனும் இடத்தில் அமைந்துள்ள பெண்ணொருவரின் வீட்டுக் கூரையில் இருந்து குறித்த மிகப்பெரும் தேன் கூட்டைக் கண்டு பிடித்துள்ளார். ஏறக்குறைய 10 மாதங்கள் அக்கூடு அங்கு இருந்ததாகவும், அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. குறித்த தேன் கூட்டில் இருந்து 50 ...
Read More »ஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்கின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்மிங்கமில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டி ...
Read More »