அவுஸ்திரேலியாவில் மகளை, தாயே கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் உயிரிழந்த சிறுமி குறித்து அவரின் தந்தை மனம் உருக பேசியுள்ளார்.
New South Wales-ஐ சேர்ந்தவர் நாதன் காடர்ன்ஸ். இவர் மனைவி தமரி குர்னே. தம்பதிக்கு லைலா (3) என்ற மகள் உள்ளார். நாதனுக்கும், குர்னேவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
லைலா தாயுடன் இருந்த வந்த நிலையில் கடந்த யூலை 31ஆம் திகதி முதல் தந்தையுடன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தந்தையிடம் வந்த அடுத்தநாள் அதாவது ஆகஸ்ட் 1ஆம் திகதி சிறுமி லைலா தனது வீட்டு படுக்கையறையில் சடலமாக கிடந்தார். அதற்கு பக்கத்து அறையில் மயக்க நிலையில் கிடந்தார் குர்னே.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் லைலாவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு, குர்னேவை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உடல்நிலை தேறிய பின்னர் மகளை கொலை செய்ததாக பொலிசார் கைது செய்தனர்.
லைலா அவர் தந்தை நாதனுடன் இருக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை பொறுத்து கொள்ள முடியாமல் லைலாவை குர்னே கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையில் மகளை பறிகொடுத்த சோகத்தில் இருக்கும் நாதன் கூறுகையில், என்னுடய அன்பு மகளாக லைலா இருந்தார், நீ எப்போதும் என் நினைவில் இருப்பாய்.
உன்னை சந்தித்தவர்களின் இதயத்திலும் நீ குடியிருப்பாய். ஒவ்வொரு முறை கடல் மற்றும் வானத்தை பார்க்கும் போது தேவதையான உன் ஞாபகம் தான் வருகிறது என உருக்கமாக கூறியுள்ளார்.