அவுஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்த தமிழ்க்குடும்பத்தின் அகதிக்கோரிக்கையை நிராகரித்து சிறிலங்காவுக்கு நாடுகடத்த வெளியேற்ற முற்பட்டபோது நீதிமன்றத்தின் ஊடாக எதிர்வரும் புதன்கிழமை வரை தடுக்கப்பட்டிருக்கின்றனர்.
தொடர்ச்சியாக துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இக்குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று மீளவும் சுதந்திரமாக வாழவிடுமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.
2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தனித்தனியே வெவ்வேறு படகுகளில் அவுஸ்திரேலியா வந்த பிரியா மற்றும் நடேஸ் ஆகியோர் தமது அகதி தஞ்சகோரிக்கையை முன்வைத்த சமூகத்தில் வாழ்ந்துவந்த நிலையில் திருமணமாகி குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழ்ந்துவந்தனர்.
இவர்களுக்கு தற்போது இரண்டு மற்றும் நான்கு வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.
எனினும் இவர்களது அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமை விமானத்தில் ஏற்றி பலவந்தமாக பேர்த்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் உடனடியாக மீளவும் ஒரு வழக்கை தாக்கல் செய்து குறித்த நாடுகடத்தலை தடுத்திருந்தனர்.
எனினும் பேர்த்தில் இடைநிறுத்தப்பட்ட குடும்பத்தினர் தயவுதாட்சணியம் இன்றி மீளவும் 3000 கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமுக்கு அழைத்துச்செல்லலப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். குறித்த முகாமில் இவர்கள் மட்டுமே தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான நீதிமன்ற வழக்குகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் புதன்கிழமை வரை வெவ்வேறு வழக்குகளாக நடைபெறவுள்ளன.
மேலும் அவுஸ்திரேலிய எதிர்கட்சித்தலைவர் உட்பட பல பிரபலங்களும் வெளிப்படையாக குறித்த தமிழ்க்குடும்பத்திற்கு ஆதரவாக தமது கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் இன்றைய ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒன்றுகூடல் பற்றிய விபரங்கள் வருமாறு:
Sunday 1 September 2019
BILOELA: 1pm, Biloela Lions Park
BRISBANE: 1pm, King George Square (near Brisbane City Hall)
MELBOURNE: 1pm, State Library Lawns, Swanston St
SYDNEY: 1pm, Martin Place (between Phillip & Elizabeth Sts)
ADELAIDE: 12.30pm, Victoria Square Tarntanyangga (near Gouger/Angas Sts)
PERTH: 11am, Forrest Place
HOBART: 1pm, Parliament House Gardens
CANBERRA: 1pm, Parliament House Lawns (north of Federation Mall)