அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே திறமை வாய்ந்தது- விராட்கோலி

ஒட்டு மொத்த திறமை அளவில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியே சிறந்தது என இந்திய கப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. சிட்னி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்தது. ஷார்ட் 29 பந்தில் 33 ரன்னும் (5 பவுண்டரி), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 23 பந்தில் 28 ரன்னும் (4 ...

Read More »

இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்!

ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.  ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை டெனியல் வியாட் 43 ரன்களும், கேப்டன் நைட் 25 ரன்களும் அடித்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இங்கிலாந்து 19.4 ஓவரில் 105 ரன்னில் ...

Read More »

சிட்னியில் காவல் துறை அதிகாரி கொலை! உதவிய நபருக்கு 38 வருட சிறை!

சிட்னியில் 22 வயது நபர் ஒருவருக்கு NSW நீதிமன்றம் 38 வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. காவல் துறை  அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு சிறுவன் ஒருவரை ஏவிவிட்டமை மற்றும், அந்த சிறுவனின் சகோதரிக்கு பணம் கொடுத்து அவரை சிரியாவுக்கு சென்று பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பயிற்சியெடுக்க தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் இந்த தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு சிட்னி பரமட்டா பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Curtis Cheng என்ற காவல் துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல்: வானம் நிறம் மாறியது – பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் கடும் புழுதிப்புயல் காரணமாக வானம் நிறம் மாறியது. இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நாட்டின் தென் கிழக்கு பகுதி முழுமைக்கும் நேற்று கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதன் காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக (செம்மஞ்சள் நிறமாக) மாறியது. 500 கி.மீ. பரப்புக்கு இந்தப் புழுதிப்புயல் வீசியது. சிட்னி தொடங்கி பல நகரங்கள் புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டன. காற்றின் தரம் மிகக்குறைவானதாக மாறியதால் பொது மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் உள்பட பல பகுதிகளில் சாலைகளே கண்களுக்கு ...

Read More »

குடியுரிமை பெறுவதற்காக அரங்கேறுகிறது போலி திருமணங்கள்!

குடியுரிமைக்காக போலி திருமணங்கள் செய்துகொள்ளும் தெற்காசிய மக்களுக்கு அவுஸ்திரேலியா உயர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற 4 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்புவர்களுக்கு திருமணம் மூலம் குடியுரிமை பெற்றுக் கொடுத்துள்ளது. இச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக 32 வயதான இந்தியரை அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினர் சிட்னியில் கைது செய்தனர். இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக 164 பேரின் பார்ட்னர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் நிரந்தர முகவரி கிடையாது ...

Read More »

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அவுஸ்திரேலிய அகதியாம்!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் அகதி தானென்று ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet தெரிவித்துள்ளார். சிலி நாட்டின் முன்னாள் அதிபர் Michelle Bachelet 70 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அந்நாட்டின் சர்வாதிகார ஆட்சியாளரின் பிடியிலிருந்து வெளியேறினார். 1975 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக புகலிடம் கோரி வந்த நிலையில் பின் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அங்கு பல காலம் வாழ்ந்தார். இவர் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய போது அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை மிக நெகிழ்சியுடன் இருந்ததாக கூறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியா தற்போது ...

Read More »

என் பிள்ளைகளுக்கு ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று கூடத்தெரியாது!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் நேற்று (20) காலை கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் எனது மகன்மார் இருவரும் அப்பாவிகள் என்றும் அவர்கள் தாக்குதல் நடாத்துவதற்கு திட்டமிட்டது எனக் கூறுவது சுத்தப் பொய் என்று கைதான சகோதரர்களின் தந்தை கூறியுள்ளார். மெல்போர்னில் பொதுமக்கள் பரவலாக உள்ள இடத்தில் துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்து தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபர்கள் இன்று (20) அவுஸ்திரேலிய பயங்கரவாத தடுப்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ...

Read More »

பாரிய ஆபத்திலிருந்து தப்பியது மெல்பேர்ன்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை கைதுசெய்துள்ள  காவல் துறை கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் பொதுமக்கள் நிறைந்து காணப்படும் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர். மெல்பேர்னின்  வடபகுதியில் உள்ள புறநகர் பகுதியை சேர்ந்த இவர்களை கடந்த மார்ச் மாதம் முதல் கண்காணித்து வந்த நிலையிலேயே   காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் சகோதாராகள்( 30.26.21) என தெரிவித்துள்ள   காவல் துறை  இவர்கள் ஐஎஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 17000 தொலைபேசி அழைப்புகளையும் ...

Read More »

மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற அவுஸ்திரேலியப் பிரதமர்!

அவுஸ்திரேலியாவில் ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இக் கருத்துக் கணிப்பு முடிவுகளை Fairfax-Ipsos வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்படி எதிர்கட்சியான லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் ஆளும் கூட்டணி அரசை விடவும் 52-48 என முன்னிலை வகிக்கிறது. இதேவேளை கடந்த மாத கருத்துக்கணிப்பில் 55-45 என லேபர் கட்சி முன்னிலை வகித்திருந்த நிலையில் இந்த முறை ஆளுங்கட்சிக்கான மக்கள் ஆதரவு 3 புள்ளிகளால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனடிப்படையில் Scott Morrison மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக உள்ளார். எதிர்கட்சித் தலைவர் Bill ...

Read More »

சபாநாயகரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றினை கொண்டுவரவுள்ளதாக ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கடந்த இரண்டுவாரங்களாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்துகொண்டார் என்பதை அடிப்படையாக வைத்தே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது நாங்கள் ஏனையவிடயங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் கூடிய விரைவில இது குறித்து தீர்மானிப்போம் என அவர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் நாடாளுமன்ற நடைமுறைகள் அனைத்தையும் புறக்கணித்துள்ளார் இதன் காரணமாக ஜனாதிபதி சபாநாயகரை நாடாளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளவேண்டிய நிலையேற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற ...

Read More »