மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற அவுஸ்திரேலியப் பிரதமர்!

அவுஸ்திரேலியாவில் ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்துக் கணிப்பின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இக் கருத்துக் கணிப்பு முடிவுகளை Fairfax-Ipsos வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி எதிர்கட்சியான லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் ஆளும் கூட்டணி அரசை விடவும் 52-48 என முன்னிலை வகிக்கிறது.

இதேவேளை கடந்த மாத கருத்துக்கணிப்பில் 55-45 என லேபர் கட்சி முன்னிலை வகித்திருந்த நிலையில் இந்த முறை ஆளுங்கட்சிக்கான மக்கள் ஆதரவு 3 புள்ளிகளால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில் Scott Morrison மக்களின் விருப்பத்திற்குரிய பிரதமராக உள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் Bill Shorten-ஐ விட 47-35 என தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றார்.

இதேவேளை வெளியான கருத்துக் கணிப்பில் 46 வீதமானவர்கள் முஸ்லிம் நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் வந்தவர்களின் எண்ணிக்கையினைக் குறைக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.