அவுஸ்திரேலியமுரசு

MH 370 தேடல் கப்பல் அவுஸ்ரேலியா திரும்புகிறது!

மலேசியா எர்லைண்ஸ் நிறுவனத்தின் காணாமல்போன MH 370 விமானத்தின் தேடல் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களில் ஒன்று மீண்டும் அவுஸ்ரேலியா திரும்புகிறது. Fugro-Equator எனும் அந்தக் கப்பலை வரவேற்க அவுஸ்ரேலிய, மலேசியப் போக்குவரத்து அமைச்சர்கள் Fremantle நகரத் துரைமுகத்துக்குச் செல்ல தயாராக இருக்கின்றனர். இந்தியப் பெருங்கடலின் சுமார் இருபதாயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தேடல் பணி நடந்தது. கடந்த வாரம் மாயமாகக் காணாமற்போன விமானத்துக்கான தேடல் பணிகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் விமானம் விழுந்த இடம் குறித்த புதிய ஆதாரங்கள் கிடைத்தால் தேடல் பணி மீண்டும் ...

Read More »

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் சிட்னியில் இன்று நடக்கிறது. அவுஸ்ரேலியா -பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டியில் ஆடாத பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி அணிக்கு திரும்புகிறார். 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் அவுஸ்ரேலிய அணி இந்த போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றி விடும். எனவே அந்த அணியினர் தொடரை கைப்பற்ற ...

Read More »

அவுஸ்ரேலியா ஓபன் டென்னிஸ்: செரீனா 4-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்ரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 6-ம் நாளான இன்று பெண்கள் ஒன்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சக நாட்டை சேர்ந்த நிகோல் ஜிப்சை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பர் 4-வது சுற்றுக்கு தகுதி

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. 5-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி)- பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர். இதில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை வான்டேவங்ஹியை எதிர் கொள்கிறார். வான்டேவங்ஹி ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன்: சானியா உள்ளே, போபண்ணா வெளியே

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். போபண்ணா 2ம் சுற்றில் தோல்வியடைந்தார். மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவுக்கு இன்று வெற்றியும் தோல்வியும் கலந்த நாளாக அமைந்துள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)- ஸ்டிரைகோவா (செக் குடியரசு) ஜோடி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சமந்தா (அவுஸ்ரேலிய )- ஷூய் ஜாங் (சீனா) ஜோடியை 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ...

Read More »

கரோலினா, ஜோகன்னா 3-வது சுற்றுக்கு தகுதி!

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா, ஜோகன்னா ஆகியோர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம். கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 9-ம் நிலை வீராங்கனையான ஜோகன்னா கோன்டா 2-வது சுற்றில் நமோமி ஒசாவை (ஜப்பான்) எதிர்கொண்டார். இதில் ஜோகன்னா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 17-வது ...

Read More »

5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளி பிடிபட்டார்!

கடந்த 2009ம் ஆண்டு சிட்னி North Epping-இல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ்வழக்கில் கொலையாளி எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டார் என்ற தகவல்கள் தற்போது பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன. ஜுலை 09 2009 அன்று தமது இல்லத்தில் தூங்கிக்கொண்டிருந்த Min Lin  உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அடுத்த நாள் காலை அந்த வீட்டுக்குச் சென்ற Min Lin -இன் சகோதரி Kathy Lin இக்கொலைகள் பற்றி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். ...

Read More »

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ரஃபேல் நடால், ப்ளோரியன் மேயரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்துவருகிறது. முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீரர்களான பெடரர், வாவ்ரிங்கா ஆகியோர் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மற்றொரு நட்சத்திர வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால் இன்று ஜெர்மனியைச் சேர்ந்த ப்ளோரியன் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சீக்கிய மாணவனுக்கு அநீதி!

அவுஸ்ரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த சீக்கியர்கள் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.  தங்களது டர்பன் அணியும் கலாச்சாரத்தை கடைபிடிப்பதில் சீக்கியர்கள் மற்ற நாடுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், அவுஸ்ரேலியாவில் டர்பன் அணிந்ததால் சீக்கிய மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. சகர்தீப் சிங் அரோரா என்ற பெண்மணி தன்னுடைய மகனை அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மெல்டான் ...

Read More »

வெற்றிக் கணக்கை தொடங்கினார் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வென்றதன் மூலம் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளார். அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக 2 மணி 20 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 6-1, 7-6 (7/4), 6-2 என்ற செட்கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். 5 முறை அவுஸ்ரேலிய  ஓபனில் சாம்பியன் ...

Read More »