மலேசியா எர்லைண்ஸ் நிறுவனத்தின் காணாமல்போன MH 370 விமானத்தின் தேடல் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களில் ஒன்று மீண்டும் அவுஸ்ரேலியா திரும்புகிறது.
Fugro-Equator எனும் அந்தக் கப்பலை வரவேற்க அவுஸ்ரேலிய, மலேசியப் போக்குவரத்து அமைச்சர்கள் Fremantle நகரத் துரைமுகத்துக்குச் செல்ல தயாராக இருக்கின்றனர்.
இந்தியப் பெருங்கடலின் சுமார் இருபதாயிரம் சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தேடல் பணி நடந்தது.
கடந்த வாரம் மாயமாகக் காணாமற்போன விமானத்துக்கான தேடல் பணிகள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் விமானம் விழுந்த இடம் குறித்த புதிய ஆதாரங்கள் கிடைத்தால் தேடல் பணி மீண்டும் தொடரலாம். அவுஸ்ரேலியப் போக்குவரத்து அமைச்சர் Darren Chester அவ்வாறு கூறியிருந்தார்.