அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலினா, ஜோகன்னா ஆகியோர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் 9-ம் நிலை வீராங்கனையான ஜோகன்னா கோன்டா 2-வது சுற்றில் நமோமி ஒசாவை (ஜப்பான்) எதிர்கொண்டார்.
இதில் ஜோகன்னா 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 17-வது வரிசையில் இருப்பவருமான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-11, 6-3 என்ற நேர் செட் கணக்கில் டொனாடுவை (குரோஷியா) வீழ்த்தினார்.
உலகின் 5-ம் நிலை வீராங்கனையான கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு) 2-வது சுற்றில் ரஷியாவை சேர்ந்த பிளின் கோவை சந்தித்தார். இதில் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் 6-ம் நிலை வீராங்கனையான சிபுல் கோவா (சுலோவாக்கியா) 6-4, 7-6, (8-6) என்ற நேர் செட் கணக்கில் சீனதை பேயை சேர்ந்த சுஹாசியை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் மகரோவா (ரஷியா), வெஸ்னியா (ரஷியா) கார்சியா (பிரான்ஸ்) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
உலகின் 18-ம் நிலை வீரரான ரிச்சர்டு கோஸ்கியூட் (பிராவை) 2-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்லோக்கை சந்தித்தார்.
இதில் கேஸ்கியூட் 6-11, 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றில் நுழைந்தார்.
மற்ற ஆட்டங்களில் ஜைல்ஸ் சிமோன் (பிரான்ஸ்), பஸ்டா (ஸ்பெயின்), அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.