அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சானியா மிர்சா மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். போபண்ணா 2ம் சுற்றில் தோல்வியடைந்தார்.
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவுக்கு இன்று வெற்றியும் தோல்வியும் கலந்த நாளாக அமைந்துள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா)- ஸ்டிரைகோவா (செக் குடியரசு) ஜோடி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சமந்தா (அவுஸ்ரேலிய )- ஷூய் ஜாங் (சீனா) ஜோடியை 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் சானியா ஜோடி வீழ்த்தியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் போபண்ணா (இந்தியா)- பப்லோ சுவாஸ் (உருகுவே) ஜோடி தோற்று வெளியேறியது. 15-ம் தரநிலையில் உள்ள போபண்ணா ஜோடி, தரநிலையில் பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட்-பிராட்லி மவுஸ்லி ஜோடியிடம் 6-2, 6-7(2), 4-6 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்தது.
ஏற்கனவே முன்னணி வீரரான லியாண்டர் பயஸ், அவரது பார்ட்னர் ஆண்ட்ரே சா மற்றும் புரவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal