நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவித்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
47 அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!
ஆஸ்திரேலியாவின் Operation Sovereign Borders (OSB) எனும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கை மூலம் கடந்த 1 நவம்பர் முதல் 30 நவம்பர் வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. அக்குறிப்பின் படி, இந்த ஒரு மாதக் காலத்தில் 47 அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் மருத்துவ உதவிக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றதாக பல ஆண்டுகளாக நவுரு மற்றும் பப்பு நியூ கினியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்தவர்கள். இம்மாத(டிசம்பர்) தொடக்கத்தில், ...
Read More »இந்தியா, ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணிகள்: மைக்கேல் வாகன்
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தின் டெஸ்ட் தரவரிசை மிகவும் மோசம், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாதான் உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணி என வாகன் தெரிவித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், இங்கிலாநது 4-வது இடத்திலும் இருப்பதை என்னால் ஏற்க முடியாது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர்களின் தரவரிசை குப்பை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ...
Read More »நீச்சல் குளத்தில் இறங்கி உடலை குளிர்வித்த கங்காரு!
சிட்னி அருகே உள்ள மெர்ரிவா நகரில் காட்டுத்தீ மற்றும் வெயிலின் காரணமாக, கங்காரு ஒன்று நீச்சல் குளத்தில் இறங்கி உடலை நனைத்து தன்னை குளிர்வித்துக்கொண்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 2 தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் ...
Read More »ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்த ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு டோனி கப்டன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள ஒருநாள் போட்டிக்கான கனவு அணிக்கு மகேந்திரசிங் டோனி கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு கோலி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய வீரர்களை கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான கனவு அணியை அறிவித்தது. இதில் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திரசிங் டோனி கேப்டனாக நியமித்துள்ளது. தொடக்க வீரர்களாக இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் அம்லா உள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: பரிசாக சாதனைத் தொகை அறிவிப்பு!
ஜனவரி 2020-ல் தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கான பரிசுத் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டு 71 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக (49.1 மில்லியன் அமெரிக்க டாலர்) அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது பரிசுத்தொகை கடந்த தொடரைவிட 13.6% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆடவர், மகளிர் பிரிவு சாம்பியன்களுக்கு 4.12 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகை என்பது கொஞ்சமாக அதிகரிக்கப்பட்ட தொகையே. மாறாக இறுதிக்கு முந்தைய சுற்றுக்களில் பங்கேற்கும் வீரர்களுக்கு பரிசுத் தொகை கொஞ்சம் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறும் ...
Read More »ஆஸ்திரேலிய ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்!
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சுமார் 40 அகதிகளுக்கு முறையான சிகிச்சை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் 33வயது குர்து அகதி மோஸ். மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்பட்ட சுமார் 40 அகதிகளும், பல மாதங்களாக மெல்பேர்னில் உள்ள ஒரு ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மனுஸ்தீவில் சுமார் 7 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 40 நாட்களுக்கு முன்பு ஆஸ்மா சிகிச்சைக்காக தன்னை ஆஸ்திரேலியா கொண்டு வந்ததாகக் கூறுகிறார் அகதி மோஸ். “வந்ததிலிருந்து எனக்கு ...
Read More »ஆஸி. தொடரின் போது ஹர்திக் பாண்டியா ஃபிட் என்று கூற என்.சி.ஏ.வுக்கு ‘பிரஷர்’?
பும்ரா காய விவகாரத்தில் வெளியே அவர் சிகிச்சை பெற்று உடற்தகுதிச் சான்றிதழுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியை அணுகிய விவகாரத்தில் என்.சி.ஏ. மறுப்பின் பின்னணியில் பல சமயங்களில் ஒரு வீரரை ஃபிட் என்று கூற நெருக்கடி ஏற்படுவதும் மீண்டும் அவர் உடனேயே காயமடைந்தார் என்றால் என்.சி.ஏ. மீது விமர்சனங்கள் எழுவதும் வழக்கமாகி வரும் விஷயம் தெரியவந்தது .அதாவது காயமடைந்த வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. பும்ரா விவகாரத்தில் அவருக்கு 4 மாதங்களாக சிகிச்சை அளித்தவர் வேறு ஒரு மருத்துவர், ...
Read More »ஆஸ்திரேலிய மாகாணத்தில் கடும் வறட்சி – 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டதால் பரபரப்பு!
ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாததாலும் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக அங்குள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தண்ணீரை பயன்படுத்த அந்த நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேட்டர் ...
Read More »தொடர்ந்து ஆஸ்திரேலிய காவலில் தமிழ் அகதி குடும்பம் !
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரிய ஈழ தமிழ் குடும்பத்தை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியிருக்கும் சூழ்நிலையில், அவர்கள் மேலும் 2 மாதங்கள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. “இந்த குடும்பத்தை மறந்து விடாதீர்கள்,” எனக் கூறியுள்ளார் இக்குடுமப்த்தின் வழக்கறிஞர் கரினா ஃபோர்ட். கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு ...
Read More »
Eelamurasu Australia Online News Portal