உருகுவேயிலிருந்து 80 கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் புறப்பட்ட விமானம் மெல்பேர்னில் தரையிறங்கியது. உருகுவேயில் தரித்து நின்ற கிரேக் மோர்டைமர் ஆடம்பர கப்பலில் காணப்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம்மெல்பேர்னில் தரையிறங்கியுள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் வைரசினால் பாதிக்கப்பட்ட 80 அவுஸ்திரேலியர்கள் உட்பட 112 அவுஸ்திரேலியர்களும் நியுசிலாந்து பிரஜைகளும் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட விமானத்தில் உள்ள பயணிகளை தனித்தனியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில பயணிகளிற்கு கப்பலில் இருந்து இறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது அவர்கள் இறங்கி பேருந்துகளில் ஏறுவதை ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்திரேலியாவில் கொரோனா பரப்பிய கப்பல்!
கொரோனா வைரஸ் பரவலை சரியாக கையாண்ட அவுஸ்திரேலிய அரசு தன்னுடைய சிறிய தவறினால், இன்று நாட்டில் 600க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவ காரணமாகியுள்ளது. தெற்கு சிட்னி நகரில் உள்ள கெம்ப்லா துறைமுகத்தில் மார்ச் மாத துவக்கத்தில் ரூபி பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல், பயணம் முடித்து வந்தடைந்தது. அது பின்னர் அடுத்த பயணத்திற்கு தயாராகி கொண்டிருந்தது. அந்த கப்பலில், வந்தவர்களில் 158 பேர் உடல்நலம் குன்றி இருப்பதை கண்ட அரசு 9பேருக்கு கொரோனா சோதனை செய்தது. அதில், யாருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக வரவில்லை. ...
Read More »2020 சர்வதேச புக்கர் பரிசு ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஷோகூஃப் அசார்க்கு …!
இந்தோனேஷியாவிலிருந்து 75 பேருடன் கிறிஸ்மஸ் தீவில் கரைசேர்ந்த சிறிய படகில் ஒரு அரசியல் தஞ்சக்கோரிக்கையளராக ஆஸ்திரேலியா வந்தடைந்த அகதி எழுதிய The Enlightenment of The Greengage Tree என்ற நாவல் International Booker Prize எனப்படுகின்ற சர்வதேச விருதுப்பட்டியலுக்கு விருதுப்பட்டியலுக்கு தெரிவாகியுள்ளது. ஈரானிய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமைக்காக ஒரு ஊடகவியலாளராக பல தடவைகள் சிறைவைக்கப்பட்ட Shokoofeh Azar இந்த விருதுப்பட்டியலுக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். ஈரானின் பார்ஸி மொழியி ல் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவலுக்கு International Booker Prize விருது கிடைக்குமானால் ஈரானிய ...
Read More »அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை மோசடி செய்த பெண்!
இலங்கையில் உள்ள செல்வந்தர் ஒருவரின் மகள் என்று கூறி அவுஸ்திரேலியாவில் 29 மில்லியன் டொலர்களை வசூலித்த பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவர் பல நிதி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதால் அவரின் பெயரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் வெளியிடவில்லை. 550 மில்லியன் டொலர்களை செல்வமாக கொண்டுள்ள இலங்கையின் முன்னணி வர்த்தகரே தமது தந்தை என்று கூறியுள்ள இந்த பெண் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்டதாக கூறப்படும் புகைப்படங்களையும் தமது மோசடி பணிகளுக்காக பயன்படுத்தியுள்ளார். இதன்போது அவர் பண வைப்புகளுக்காகவும் பணத்தை வரவழைத்துக்கொள்ளவும் தமது “கிரான்ட் சுப்பர் ரிச்” ...
Read More »ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்த ஷேன் வார்னே
சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே, ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை இதன்மூலம் தெரிவித்து வருகிறார்கள். ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு ஆலன் பார்டரை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய ...
Read More »இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்ய அஞ்சுவதற்கு காரணம்!
ஐபிஎல் தொடரில் அதிக அளவில் பணம் கிடைப்பதால் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட விரும்புவதில்லை என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது எதிரணி வீரர்களை மிகப்பெரிய அளவில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவார்கள். குறிப்பாக ஆஷஸ் தொடரின்போதும், இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போதும் இந்த ஸ்லெட்ஜிங் அதிக அளவில் இருக்கும். இந்திய வீரர்களை சீண்டியே அவுட்டாக்கும் யுக்தியை கடைபிடிப்பார்கள். ஆனால் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்றப்பிறகு, விராட் கோலி ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு இணையாக வார்த்தைப்போரில் ...
Read More »ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்த ஆஸ்திரேலியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ’கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஓ’கீபே. 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து விளையாடும்போது ஒரு டெஸ்டில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 35 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் சிறப்பாக விளையாடினார். ஆனால், ...
Read More »கொரோனா வைரசால் தள்ளிப்போன ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் திருமணங்கள்
கொரோனா வைரஸ் கிரிக்கெட் போட்டியை மட்டும் நிறுத்தவில்லை, ஆஸ்திரேலிய வீரர்களின் திருமண நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் உள்ளன. ஜூலை மாதத்திற்குப் பிறகுதான் மீண்டும் கிரிக்கெட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வீரர்கள் ஊதியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதோடு மட்டுமல்ல ஆஸ்திரேலியா வீரர்களின் திருமண நிகழ்ச்சிகளும் தள்ளிப்போகியுள்ளன. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா, பெண்கள் அணி இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஸ் ஜோனஸ்சன், ஜேக்சன் பேர்ட், மிட்செல் ஸ்வெப்சன், அண்ட்ரிவ் ...
Read More »கொரோனா அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகையில் தாக்கம் செலுத்தக்கூடுமா?
உலகெங்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம், இந்தியா முதல் ஆஸ்திரேலியா வரை, சீனா முதல் அமெரிக்கா வரை எதிர்பாராத சூழல்களை உருவாக்கியிருக்கிறது. இந்த தாக்கம் பல பின்விளைவுகளை உருவாக்கும் எனக்கூறப்படும் நிலையில், தற்போது கொரோனா உருவாக்கியுள்ள அச்சம் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை புள்ளிவிவரங்களில் தாக்கம் செலுத்தக்கூடும் எனப்படுகின்றது. கொரோனா அச்சம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் வெளிநாட்டினரின் குடியேற்றத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சில ஆஸ்திரேலியர்கள் வரவேற்கக்கூடும் என்றும் ஆனால் அது ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் ...
Read More »மெல்போர்ன் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரசை அழிக்க ஆய்வு!
உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த தொற்றுநோய்க்கு பலியாகி உள்ளனர். தற்போது இந்த நோய்க்கான தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டின், கோவிட் -19 வைரசுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ...
Read More »
Eelamurasu Australia Online News Portal