நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில் அவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மீள்குடியேற்ற ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக சிறிய தீவு நாடான நவ்ரூவில் அமைந்துள்ள தடுப்பு காவல் முகாம்களில்தான் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சட்டவிரோதமாக நுழைய முயலும் குடியேறிகள அடைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத வௌ்ளப் பெருக்கு!
அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் கிழக்கு அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களிலும் கடும் மழை பெய்யும் என்று அதிகாரிகள் இன்று எதிர்வு கூறியுள்ளனர். கரையோர நகரமான டவுன்ஸ்வில்லேயில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வேறிடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிராந்தியத்தில் பருவப் பெயர்ச்சி மழை கடும் தாக்கத்தை ஏற்படுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. Townsville பகுதியில் 150 மில்லிமீற்றர் தொடக்கம் 200 மில்லிமீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், இது ...
Read More »18 பேர் கொல்லப்பட்ட மோசூல் வான் தாக்குதல் தொடர்பில் அவுஸ்திரேலியா!
கடந்த 2017ஆம் ஆண்டு ஈராக் மோசூலில் 18 பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது வான் படையினர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அந்த கால கட்டத்தில் மோசூல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அந்த நகரை மீட்பதற்காக அமெரிகாவின் தலைமையிலான சர்வதேச படையணியினர் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். எப்படியிருப்பினும், தமது படையணியின் வான் தாக்குதல் காரணமாகத்தான் இந்த பொது மக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர் என்பதனை உறுதியாக கூறமுடியாது என அவுஸ்திரேலிய வான் ...
Read More »அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டம்!
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கன்பரா மைதானத்தில் இடம் பெறுகின்றது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
Read More »அவுஸ்திரேலியாவில் கொளுத்தும் வெயில்! 45 ஆயிரம் வீடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சுமார் 45 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் இல்லை என தெரியவந்துள்ளது. சிட்னியை 40 டிகிரி செல்சியஸ் அளவுள்ள அனல்காற்று தாக்கக்கூடுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக அவுஸ்திரேலியாவில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அவசரகாலக் குழு ஆராய்ந்து வருவதாக மின் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது. சிட்னியின் புற நகர்ப் பகுதியில் உள்ள சில வட்டாரங்களில் வீடுகள், கடைகளில் மின்சாரம் இல்லை. வாகனமோட்டிகள், போக்குவரத்து சமிக்ஞைகளைக் கடக்கும்போது ...
Read More »அவுஸ்திரேலியாவினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று துறைமுக படகுகள்
அவுஸ்த்ரேலியாவினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று மூன்று துறைமுகு படகுகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வு கொழுப்பு துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா கடற்படை தளத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையில் இடம்பெற்றது. இத் துறைமுக படகுகள் 2017 ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் ட்ருன்பலினால் சிறிலங்கா கடலோர பாதுகாப்பு படைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, குறித்த படகுகளை சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையஸ் ஹட்ஷ்சன் பாதுகாப்பு ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் ஒசாகா பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவாவை ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியதும் இருவரும் பொறுப்பாக ஆடினர். முதல் செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர். இறுதியில், முதல் செட்டை 7-6 (2) என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார் ...
Read More »அவுஸ்திரேலிய ரோந்துப் படகுகள் சிறிலங்காவில்!
அவுஸ்ரேதிலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை சிறிலங்கா கடலோரக் காவற்படைக்கு நேற்று வழங்கியுள்ளது. ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படையின் ரங்கல்ல தளத்தில் இடம்பெற்றது. சிறிலங்கா கடற்படைக்கு அவுஸ்திரேலியா கடந்த 2014 ஆம் ஆண்டு 38 மீற்றர் நீளம் கொண்ட, பே ரகத்தைச் சேர்ந்த இரண்டு ரோந்துப் படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று கடலோரக் காவல்படைக்கு வழங்கப்பட்டுள்ள, 3 படகுகளும் சிறிய வகையானது எனத் தெரியவந்துள்ளது.
Read More »48 பந்தில் சதம் விளாசிய சிட்னி தண்டர் வீரர்!
பிக் பாஷ் டி20 லீக் தொடரில சிட்னி தண்டர் அணியைச் சேர்ந்த பெர்குசன் 48 பந்தில் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் – சிட்னி தண்டர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய பெர்த் ஸ்கார்சர்ஸ் தொடக்க பேட்ஸ்மேன் ஷான் மார்ஷ் அதிரடியால் (55 பந்தில் 96 ரன்கள்) ...
Read More »அவுஸ்திரேலியாவில் திடீரென ஏற்பட்ட அசாதாரண நிலை!
அவுஸ்திரேலியாவில் பாரிய காட்டுத் தீ பற்றியுள்ளது. இதனால் 720 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ பரவும் அசாதாரண நிலை இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டாஸ்மேனியா வனப்பகுதியில் உள்ள புதர் காடுகளில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் வேகமாக நெருப்பு பரவியதால் சுமார் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தீ பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த காட்டுத் தீயை அணைப்பதற்கு நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தீயின் வேகம் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் 720 கிலோ மீட்டர் தூரம் தீ பரவலாம் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal