அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத வௌ்ளப் பெருக்கு!

அவுஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் கிழக்கு அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த பிராந்தியத்தில் எதிர்வரும் நாட்களிலும் கடும் மழை பெய்யும் என்று அதிகாரிகள் இன்று எதிர்வு கூறியுள்ளனர்.

கரையோர நகரமான டவுன்ஸ்வில்லேயில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் வேறிடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பிராந்தியத்தில் பருவப் பெயர்ச்சி மழை கடும் தாக்கத்தை ஏற்படுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஔிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Townsville பகுதியில் 150 மில்லிமீற்றர் தொடக்கம் 200 மில்லிமீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், இது இந்த மாத பருவ மழையுடன் சராசரி ஒப்பீட்டளவை கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உள்ளூர் அதிகாரிகள் இன்று காலை பல வௌ்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கையை விடுக்கப்பட்டது.

அத்துடன், பொதுமக்கள் பாதைகளை பயன்படுத்தும் போது மிக அவதானமாகவும், அநாவசிய நெருக்கடிகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை அவுஸ்திரேலியாவின் ஏனையப்பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.