ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட 113 விலங்கினங்களுக்கு உடனடி உதவி தேவை என்றும், அப்படி உதவி கிடைக்காவிட்டால் விலங்கினங்கள் அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கோடை வெயில் காரணமாக அந்த நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்து மாகாணங்களில் தொடர்ந்து 6 மாதங்களாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த காட்டுத்தீயில் கோலா கரடிகள் உள்ளிட்ட பல அரிய வகை வன உயிரினங்கள் செத்து மடிந்தன. பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன என சுமார் 100 கோடி வன உயிரினங்கள் இந்த ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு பெண்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி இந்தியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணிகளுக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லீக் சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. ...
Read More »சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு!
சிறிலங்கா அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸூடன் இன்று 10.02.2020 நண்பகல் ஆளுனர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். இச்சந்திப்பின் போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய ஏற்றுமதித்துறை, சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கைநெறிகள். தாதியர்களுக்கான சர்வதேச தரத்திலான கற்கைநெறி, என்பன தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன அடுத்த 5 வருடத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆவலுடன் வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட துறைகளில் முன்னெடுக்ககூடிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ...
Read More »காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம்!
கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆஸ்திரேலியர்கள் அழைத்து செல்ல சீனாவிடம் அனுமதிக்கோரி காத்திருக்கிறது ஆஸ்திரேலிய விமானம். இதில் கொண்டு வரப்படக்கூடிய ஆஸ்திரேலியர்கள், வட ஆஸ்திரேலிய பிரதேசமான டார்வினுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு பயன்படுத்தப்படாத கிராமப்புறத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சீனாவிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலியர்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க இருக்கின்றனர். இதனை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் உறுதி செய்திருக்கிறார். இந்த சூழலில், கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரை விட்டு வெளியேற ஆஸ்திரேலிய அரசு ...
Read More »மெல்போர்ன் ஸ்டார்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ்!
சிட்னியில் நடந்த பிக் பாஷ் டி 20 லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிக் பாஷ் டி 20 லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 12 ஓவராக குறைக்கப்பட்டது. அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் ...
Read More »உயிரிழக்கும் நிலையில் உள்ள மகனை பார்ப்பதற்கு சீன தாய்க்கு அவுஸ்திரேலியா அனுமதி!
மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிழக்கும் தறுவாயில் உள்ள மகனை பார்ப்பதற்கு சீனாவை சேர்ந்த தாய்க்குஅவுஸ்திரேலிய அரசாங்கம் கொரானாவைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்தி அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரியில் விக்டோரியாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய் மெல்பேர்ன் மருத்துவமனையில் உயிரிற்காக பேராhடிக்கொண்டிருக்கின்ற லி சாங்சியாங் என்ற 22 இளைஞனை பார்ப்பதற்கே இளைஞனின் தாய்க்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளது. ளைஞனின் தாய் மகனை பார்ப்பதற்காக விண்ணப்பித்த தருணத்திலேயே சீனா பிரஜைகள் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு ஸ்கொட் மொறிசன் அரசாங்கம் தடை விதித்தது. இந்நிலையில் தடையிலிருந்து இளைஞனின் தாய்க்கு விதிவிலக்கு அளித்துள்ள அரசாங்கம் மகனை பார்ப்பதற்காக ...
Read More »ஆஸ்திரேலிய நூலகத்திற்கு தடுப்பு முகாம் அகதியின் நூல் நன்கொடை !
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி, நியூசிலாந்தில் வாழ்ந்து வருபவர் பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதி. பத்திரிகையாளரான இவர், ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், இத்தடுப்பு அனுபவத்தை ‘நண்பன் இல்லை, ஆனால் மலைகள்: மனுஸ் சிறையிலிருந்து எழுதுகிறேன்’ என்ற நூலாக அவர் எழுதியிருந்தார். ஆஸ்திரேலிய அரசின் அகதிகள் கொள்கையை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கும் இந்நூலின் 10 பிரதிகளை ...
Read More »சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய தடை!
சீனாவில் ஏற்பட்ட கொரோனோ வைரஸ் குறித்த அச்சம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில், கடந்த பிப்ரவரி 1 முதல் சீனர்களுக்கும் சீனா வழியாக பயணிப்பவர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, ஆஸ்திரேலிய சமூகத்தின் சுகாதாரமும் நலனும் முதன்மையானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமைப் பெற்றவர்கள் தவிர எவரும் சீனாவிலிருந்தோ சீனா வழியாக பயணித்தோ ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது. ஆஸ்திரேலியாவின் இத்தீவிர எல்லைக்கட்டுப்பாட்டு ...
Read More »ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்!
ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “காட்டுத் தீ நமக்கு கருப்புக் கோடைகாலம். இந்தத் தீ இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆபத்து இன்னும் பல இடங்களில் நமக்கு முன்னால் உள்ளது. இந்தக் காட்டுத் தீயில் பலியானவர்களைக் கவுரவிப்பதற்காக நாம் ஒன்று கூடி இருக்கிறோம். தொடர்ந்து இந்த கருப்புக் கோடை காலத்திலிருந்து நாங்கள் பாடம் கற்றுக் ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச்!
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 32 வயதான ஜோகோவிச் 5-வது முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தை 276-வது வாரமாக அலங்கரிக்கிறார். ...
Read More »
Eelamurasu Australia Online News Portal