நிகழ்வுமுரசு

அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2015

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 15 – 09 – 1987முதல் சாகும் வரையிலான உண்ணாநோன்பிருந்து 26 – 09 – 1987 அன்று, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின், 28-வது ஆண்டு நினைவான “தியாகதீபம் கலைநிகழ்வு” 26 – 09 – 2015 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஒஸ்ரேலியாவில் மெல்பேண் நகரின் சென் ஜூட் மண்டபத்தில்  சிறப்பாக நடைபெற்றது. திருமதி தமயந்தி சுபாஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை மூத்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் ...

Read More »

“ச(ன்)னத்தின் சுவடுகள்” மற்றும் “நாங்களும் மனிதர்களே” வெளியீட்டு நிகழ்வு

ச(ன்)னத்தின் சுவடுகள் , மற்றும் நாங்களும் மனிதர்களே என்ற இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு 10 – 05 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில், உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் வலிசுமந்த காலத்தின் பதிவாக, மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற  இந்நிகழ்வில், 200 இற்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளையசமூக செயற்பாட்டாளர் கௌசிக் மற்றும் காந்திமதி ஆகியோர் நிகழ்வை நிறைவாக தொகுத்தளித்தனர். மாலை 4.20 மணிக்கு யாழ் நிகழ்வு  மண்டபத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், முதல் நிகழ்வாக தாயக விடுதலைப் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2015” நினைவு நிகழ்வுகள்

அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2015” நினைவு நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை 19 – 04 – 2015 அன்று எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மெல்பேணில் ஹைடில்பேர்க் இல் அமைந்துள்ள சென்ற்.ஜோன்ஸ் நிகழ்ச்சி மண்டபத்தில் சரியாக மாலை 6 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு ஆரம்பமாகியது. அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு. குணரட்ணம் அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மாணிக்கவாசகர் அவர்களும், ஏற்றியதைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்கள் மாமனிதர்களுக்கான ஈகச்சுடரேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. ...

Read More »

ஜீலோங் நகரில் சிறப்புற நடைபெற்ற தமிழீழத் தேசியக் கொடியேற்றல் நிகழ்வு

அவுஸ்திரேலியா ஜீலோங் (Geelong) நகரில் தமிழீழத் தேசியக்கொடியைத் தமது தொழிற்சங்கக் கட்டடத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குத் தமது ஆதரவை அந்நகரத் தொழிற்சங்கம் வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளது. இத்தொழிற்சங்கத்தினரோடு ஏனைய இடதுசாரி அமைப்புக்களும் இக்கொடியேற்றல் நிகழ்வில் கலந்துகொண்டு ஆதரவு நல்கின. கடந்த வெள்ளிக்கிழமை (17-04-2015) மாலை 6.00 மணிக்கு இக்கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள நகரம் ஜீலோங் நகரமாகும். தமிழர்கள் யாருமே வசிக்காத ஒரு நகரமாக இருந்து வந்த இந்நகரத்தில் அண்மைக்காலத்தில்தான் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் குடியமர்த்தியது அவுஸ்திரேலிய ...

Read More »

அவுஸ்திரேலியாவில் நீதிக்கான நடைபயணமும் பேரணியும்

விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டிருக்கு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரியும், படையினரின் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழரின் வாழ்விடங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும், படையினரிடம் சரணடைந்த அல்லது காணாமல்போகச்செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரியும் இப்பேரணி நடைபெற்றது. இன்று 15 – 03 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளன்வேவலி என்ற இடத்திலிருந்தும் காலை 10.30 மணிக்கு சண்சைன் என்ற இடத்திலிருந்து ஆரம்பித்த நடைபயணத்தில் 15 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டனர். மாலை 3 மணிக்கு மெல்பேணின் மத்தியிலுள்ள State Library என்ற இடத்தையடைந்த ...

Read More »

மெல்பேணில் மாவீரர் நாள் – 2014

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 – 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சரியாக மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட் டாளருமான திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் ...

Read More »

அவுஸ்திரேலியா மெல்பேணில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு – 2014

தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் ‘தியாகதீப கலைமாலை’ நிகழ்வு இம்முறையும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.  திலீபனின் 27ஆவது ஆண்டுநினைவுகளை சுமந்தவாறு கடந்த சனிக்கிழமை 27 – 09 – 2014 அன்று  மெல்பேணில் அமைந்துள்ள சென்.ஜூட் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் இந்நிகழ்வு தொடங்கியது. தியாகி லெப்.கேணல் திலீபன் நினைவாக ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் ‘தியாகதீப கலைமாலை’ நிகழ்வு இம்முறையும் மெல்பேணில் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.  திலீபனின் 27ஆவது ஆண்டுநினைவுகளை சுமந்தவாறு கடந்த சனிக்கிழமை 27 – 09 – 2014 அன்று ...

Read More »

அடங்காப்பற்று – நாட்டியத்தில் ஒரு வரலாற்றுக் காவியம்

இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் ‘அடங்காப்பற்று’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று. இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் ‘அடங்காப்பற்று’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் ...

Read More »

வரலாற்றில் வெளிச்சத்தை தேடி

தளராத உறுதியுடன் வரலாற்றில் வெளிச்சத்தை தேடி……. தென் ஆசியவியல் மையத்தால் சிட்னியில் 14-09-2013 அன்று ஈழத்தமிழர் வரலாற்று ஆவண கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரத்பீல்ட் நகர மண்டபத்தில் நடைபெற்ற இம்முக்கிய நிகழ்விற்காக, யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி. சிவநாதன் வருகைதந்திருந்தார். தளராத உறுதியுடன் வரலாற்றில் வெளிச்சத்தை தேடி……. தென் ஆசியவியல் மையத்தால் சிட்னியில் 14-09-2013 அன்று ஈழத்தமிழர் வரலாற்று ஆவண கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரத்பீல்ட் நகர மண்டபத்தில் நடைபெற்ற இம்முக்கிய நிகழ்விற்காகஇ யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி. சிவநாதன் வருகைதந்திருந்தார். ...

Read More »

மாவீரர் நாள் நிகழ்வுகள் 2013 – மெல்பேர்ண்

அவுஸ்திரேலியா மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஹங்கேரியன் மண்டபத்தில் 27 – 11 – 2013 புதன்கிழமை அன்று நடைபெற்ற இந்த உணர்வெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அவுஸ்திரேலியா மெல்பேணில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஹங்கேரியன் ...

Read More »