குமரன்

3 நிமிடத்தில் 122 செல்பி

3 நிமிடத்தில் 122 செல்பிக்கள் எடுத்து அமெரிக்க பாடகர் டோனி வால்பெர்க் புதிய உலக சாதனை படைத்திருக்கிறார். ஸ்மார்ட் போன்களின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைமீது நின்று செல்பி, ஆபத்தான இடங்களில் செல்பி என விதவிதமாக செல்பி எடுத்து உலகளவில் பலர் புகழ்பெற்று வருகின்றனர். இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே அதிகபட்ச உலக சாதனையாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாடகர் டோனி வால்பெர்க் 3 நிமிடங்களில் 122 செல்பி எடுத்து ...

Read More »

அவுஸ்ரேலியா: கேளிக்கைத் தள அசம்பாவிதத்தில் பிழைத்த 2 சிறார்கள்

அவுஸ்ரேலியாவின் ட்ரீம்வர்ல்ட் (Dreamworld) கேளிக்கைத் தலத்தில் ஏற்பட்ட விபத்தில், அதிர்ஷ்டவசமாக இரு சிறுவர்கள் தப்பிப் பிழைத்ததாக அந்நாட்டுப் காவல்துறையினர்  கூறியுள்ளனர். அந்தச் சம்பவத்தில் 4 பேர் மாண்டனர்.அதிவேகமாக ஓடும் செயற்கை ஆற்று படகுப் பயணத்தின்போது சம்பவம் ஏற்பட்டது. இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதை கண்காணிப்புக் கேமரா பதிவுகள் காட்டின. ஒரு படகில் இருந்த அந்த இரு சிறுவர்கள் தூக்கி எறியப்பட்டதாகப் காவல்துறையினர் கூறினர். கோல் கோஸ்ட்டில் அமைந்துள்ள ட்ரீம்வர்ல்ட் உல்லாசப் பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது.

Read More »

‘நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியை இந்திய அரசு ஊக்குவிக்கவேண்டும்’ – அவுஸ்ரேலியா பேராசிரியர் கோரிக்கை

பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சியை இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று பிரபல அவுஸ்ரேலியா பேராசிரியர் கூறினார். அவுஸ்ரேலியாவின் உயரிய விருது அவுஸ்ரேலியா தலைநகர் கான்பெர்ரா நகரில் உள்ள அவுஸ்ரேலியா தேசிய பல்கலைக்கழகத்தில் கடந்த 26 ஆண்டுகளாக மின்னணு பொருள் பொறியியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர், சென்னுப்பட்டி ஜெகதீஸ். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் அவுஸ்ரேலியா’ என்னும் உயரிய விருதையும் பெற்றவர் ஆவர். புகழ் பெற்ற இந்திய கல்வி நிறுவனங்களான டெல்லி ஐ.ஐ.டி, சென்னை ...

Read More »

விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் கீரை வகையை பயிர் செய்யும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். பூமியைப் போன்று விண்வெளியிலும் உணவு வகைகளை பயிர் செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் ரக கீரை வகை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து இந்த திட்டத்தின் மேலாளர் நிக்கோல் டம்பர் கூறுகையில் “நாங்கள் எதிர்பார்த்ததைவிட பணிகள் சிறிது மந்தமாகவே நடைபெற்றது. எனினும் அனைத்து வகை கீரைகளையும் வெற்றிகரமாக பயிர் செய்து ...

Read More »

ஜெயலலிதா மனோபலத்தால் மீண்டு வருவார்-கவிஞர் வைரமுத்து

முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ பலத்தாலும், மனோபலத்தாலும் மீண்டு வருவார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 35-வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர் மேரிசியாங் அப்பல்லோ பிசியோதெரபி நிபுணர்களுடன் இணைந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கிறார். இது தவிர எய்ம்ஸ் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்நானியும் சிகிச்சை அளித்து வருகிறார். தொடர்ந்து அளிக்கப்படும் தீவிர சிகிச்சை மூலம் ...

Read More »

அவுஸ்ரேலியாவை சேர்ந்த வயதான உராங்குட்டான் – கின்னஸ்

உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமை அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பான் என்ற பெண் உராங்குட்டானுக்கு கிடைத்திருக்கிறது. அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்ரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பான் மிக வயதான உராங்குட்டான் என கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மலேசியா நாட்டில் 1956-ம் ஆண்டு பிறந்த பான் அங்குள்ள சுல்தான் ஜோகூர் என்ற மிருகக்காட்சி ...

Read More »

படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகள் மீது இனப்பாகுபாடு

படகு மூலம் அவுஸ்ரேலியா சென்று தஞ்சம் கோரியுள்ள தமிழ் அகதிகள் மீது இனப்பாகுபாடு காட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைமுறைபடுத்தப்பட்ட விதிமுறைகளால் அகதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அகதிகளுக்கு இணைப்பு வீசா என்ற பெயரில் வழங்கப்படுகின்ற தற்காலிக வீசாவின் ஊடாக அங்கு தொழில்புரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்கள் தங்களுக்கு இடையிலான தொடர்புகளை அவர்களைப் போன்ற அகதிகளுடனேயே பேண வேண்டிய நிலை காணப்படுகிறது. இதேவேளை, அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகள் இனரீதியாக பாகுபடுத்தப்பட்டு ...

Read More »

பாடகியாக மடோனா செபாஸ்டியன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கவண்’ படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமாக இருக்கிறார் மடோனா செபாஸ்டியன். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைத்து வருகிறார். நவம்பரில் இசை வெளியீடு, டிசம்பரில் படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சமீபத்தில் இப்படத்துக்கு ‘கவண்’ என தலைப்பிட்டு இருக்கிறது படக்குழு. மேலும், தற்போது ...

Read More »

அவுஸ்ரேலியா பொழுதுப்போக்கு பூங்காவில் பயங்கர விபத்து

அவுஸ்ரேலியா நாட்டின் குவீன்ஸ்லேன்ட் மாநிலத்தில் உள்ள பிரபல தீம் பார்க்கில் நேற்று (25)  ஏற்பட்ட பயங்கர விபத்தில் நான்குபேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவின் குவீன்ஸ்லேன்ட் மாநிலத்தில் சுற்றுலாவாசிகள் அதிகமாக வருகைதரும் கோல்ட் கோஸ்ட் நகரின் கூமோரா பகுதியில் ’டிரீம் வேர்ல்ட்’ என்னும் பிரபல தீம் பார்க் ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள முக்கிய பொழுதுபோக்கு அம்சமான ’தன்டர் ரிவர் ரேபிட் ரைட்’ என்னும் அலையடிக்கும் ஆற்றுநீரில் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை குகைகள் மற்றும் மரப்பாலங்களை கடந்து ஆறுபேர் அமர்ந்து செல்லும் பரிசல் சவாரி மிகவும் ...

Read More »

மக்களைக் கவரும் அப்பிள் ஐபாட்

அக்டோபர் 23, 2001 அன்று ஆப்பிள் துணை நிறுவனரும், முன்னாள் தலைமை அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபாட் என்னும் இசை கேட்கும் சாதனத்தை அறிமுகப்படுத்தினார். இது இசை மீதான மக்களின் மனநிலையை மாற்றியமைத்தது என்றுகூடச் சொல்லலாம். ஐபாட் சாதனத்தின் முதல் தலைமுறை 1000 பாடல்களைச் சேமிக்கும் வகையில் 5 ஜி.பி. சேமிப்பானையும், அதைக் கேட்கும் சாதனத்தையும் கொண்டிருந்தது. இரண்டாவது தலைமுறை தொடுதிரை வசதியோடு, விண்டோஸ் இயங்குபொருளின் உதவியையும் கூடுதலாகப் பெற்றிருந்தது. இப்போது மூன்று வகையான ஐ-பாட்கள் சந்தையில் உள்ளன. அவை, அதி கச்சித ஐபோட், ...

Read More »