Home / குமரன் (page 985)

குமரன்

செவ்வாயில் குடியேற ‘நாசா’ பயிற்சி

செவ்வாய்க் கிரகத்தில் வாழ்வதை சாத்தியமாக்கும் ஆராய்ச்சிக்காக ஹாவாயில் அமைக்கப்பட்ட விண்வெ ளிச் சூழலிலான முகாமில் ஓராண்டு காலத்திற்கு மேலாக தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த 6 விஞ்ஞானிகள் சோதனை களை வெற்றிகரமாக முடித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தின் புறச்சூழலுக்கு ஏற்ப அந்தக் கிரகத்தில் மனிதன் எப்படி வாழ்வது என்பதை அனுபவ ரீதியிலும் , ஆராய்ச்சி ரீதியிலும் அறிவதற்காக, ஹாவாய் தீவின் மாவ்னா லோ மலைக் குன்றுப் பகுதியில் இந்தத் தனிமை ஆய்வுக்கூடம் ...

Read More »

ஜேக்கி சானுக்கு ஒஸ்கர் விருது

திரைத்துறையில் இதுவரை ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக, சீனத் திரைப்பட நடிகர் ஜேக்கி சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.  ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சானுக்குத் தற்போது 62 வயதாகிறது. சீனத் திரைப்படங்களில்  அசாத்தியமான சண்டை காட்சிகளில் நடித்ததன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.  இதன்மூலம்  ஹாலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து “ரஷ் ஹவர்”, “கராத்தே கிட்” போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர். இதுவரை 30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கி சான் திரைத்துறையில் ...

Read More »

ஈழ புகலிட கோரிக்கையாளர் நாடு கடத்தக்கூடாது-சிட்னியில் ஆர்ப்பாட்டம்

ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்து நாடு கடத்தப்படக்கூடாது ...

Read More »

அவுஸ்ரேலியாவின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ்

இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்ரேலியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. நான்காவது போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை அணியின் கப்டன் மேத்யூஸ் காயம் அடைந்தார். இதனால் ...

Read More »

அவுஸ்.க்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து மேத்யூஸ் விலகல்

இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக அவுஸ்ரேலியாவிற்கு எதிரான எஞ்சிய போட்டியில் இருந்து விலகியுள்ளார். இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் மூன்று அவுஸ்ரேலியா வெற்றி பெற்று தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ளது. நான்காவது போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியின்போது இலங்கை அணியின் கப்டன் மேத்யூஸ் காயம் அடைந்தார். இதனால் ...

Read More »

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்ட வேண்டும் – பான்கிமூன்

வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐநா செயலர் பான்கிமூன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இன, மத, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தினையும், மனித உரிமையின் மதிப்பினை ஏற்படுத்துவதற்கும் இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் ...

Read More »

பூமியை தொடர்பு கொள்ளும் வேற்றுகிரகவாசிகள்?

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே வசிக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்று வரையிலும் விடை கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் தொலைநோக்கியான Zelenchukskaya, பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை வாய்ந்த நட்சத்திரத்தில் இருந்து வருகிறது என்றும், 94.4 ஒளியாண்டுகள் கடந்து வருகிறது எனவும் கணித்துள்ளது. இது வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அவர்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் ...

Read More »

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் தான் இறந்தார் என்று ஜப்பான் அரசு ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவம் என்ற படையை உருவாக்கி ஆயுதப் போராட்டம் நடத்தினார். அப்போது ஜப்பான் சென்ற சுபாஷ் அதன் பிறகு நாடு திரும்பவில்லை. நாடு விடுதலை அடைந்த பின்பும் கூட அவர் இந்தியாவில் இல்லை. இதனால் நேதாஜி பற்றிய ...

Read More »

படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் தமன்னா, காஜல்

படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட தமன்னா ரூ.75 லட்சமும், காஜல் அகர்வால் ரூ.50 லட்சமும் சம்பளம் வாங்குகிறார்கள். கதாநாயகிகள் சிலர், படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சம்பாதிக்கிறார்கள். ஓரிரு நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடன காட்சியை முடித்து கொடுக்கின்றனர். இதற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் மேலும் சில முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆடுவது இல்லை என்பதை கொள்கையாக வைத்து இருக்கிறார்கள். நயன்தாரா ‘சிவகாசி’ படத்தில் ...

Read More »

சேமிப்பு வசதியை அதிகரிக்கும் iCloud சேவை

அப்பிள் நிறுவனத்தினால் வழங்கப்படும் ஒன்லைன் சேமிப்பு சேவையான iCloud சேவையில் அதிரடி மாற்றம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது தனது வாடிக்கையாளர்களுக்கான சேமிப்பு வசதியினை 2TB வரை அதிகரிப்பு செய்துள்ளது. இதற்கு மாதாந்த கட்டணமாக 19.99 அமெரிக்க டொலர்களை அறிவிடவுள்ளது. இதற்கு முன்னர் 1TB சேமிப்பு வசதி வரை வழங்கப்பட்டிருந்ததுடன், மாதாந்தக் கட்டணமாக 9.99 டொலர்கள் அறவிடப்பட்டிருந்தது. அடுத்த இரு வாரங்களுக்குள் அப்பிள் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளான iPhone 7 ...

Read More »