குமரன்

ஐந்து நட்சத்திரஹோட்டல் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு மரண அச்சுறுத்தல்

பத்திரிகையாளரும் ஜனாதிபதி ஊடகபிரிவின் முன்னாள் இயக்குநருமான சமுடித்த சமரவிக்கிரம தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். காவல் துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர்களின் விபரங்களை எதிர்காலத்தில் வெளியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் எனக்கு எதிராக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எதிர்காலத்தில் நான் இவர்களின் விபரங்களை வெளியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார். எனக்கு எதிரான இந்த நடவடிக்கைககு ஆதரவளிப்பவர்களிடமிருந்து ...

Read More »

யாழ்ப்பாண நூலக எரிப்பின் நாற்பதாண்டுகள்: கற்றுக் கொள்ளாத பாடங்கள்

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அதன் அவலத்தை, நாங்கள் ஒப்பாரியாக ஆண்டுதோறும் நினைவுகூர்ந்தபடி கடத்துகிறோம். திரும்பிப் பார்க்கையில் இந்த நூலகமும் அதன் எரிப்பும் அதைத் தொடர்ந்த சிதைவும், வலி நிறைந்த கசப்பான உண்மை ஒன்றைச் சொல்கின்றன. ஒரு சமூகமாக நாம் வரலாற்றைப் பதிதலிலும் ஆவணப்படுத்தலிலும் முழுமையாகத் தோற்றிருக்கிறோம். நாம், சிலவற்றை வெளிப்படையாகவும் சுயவிமர்சன நோக்கிலும் பேசியாக வேண்டும். இப்போது, இதுபற்றிப் பேசுவதற்கான காலமா என்று கேட்காதீர்கள். இவ்வாறு கேட்டுக்கேட்டே, நான்கு தசாப்தங்களைக் கடந்துவிட்டோம். யாழ்ப்பாண நூலக எரிப்புக்கு ஒரு சமூகப் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஆபத்தான நபராக மாறிய இலங்கையர்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்போது பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரசிற்கு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற நபரே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 8 ம் திகதி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற நபர் ஒருவர் மூலமே அங்கு வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 40 வயது நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய வேளை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நபர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பியதை தொடர்ந்து ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 23 ம் ...

Read More »

திருமணம் ஆகிவிட்டதா… ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். நடிகையும், பாடகியான இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகியிருந்த ‘கிராக்’ திரைப்படத்தில், நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் இருந்த ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ‘திருமணம் செய்து கொண்டீர்களா?’ என ...

Read More »

உடல்நிலை பாதிப்பு தரிணிகா கிறிஸ்மஸ் தீவிலிருந்து பேர்த் கொண்டு செல்லப்பட்டுள்ளார்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த நடேஸ்பிரியா தம்பதியினரின் புதல்வி தரிணிகா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பேர்த்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். கடந்த பத்து நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் நேற்று கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Read More »

விக்டோரியாவில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேருக்கு கோவிட் தொற்று!

விக்டோரியாவில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக ஒன்பது பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் ஏற்கனவே இனங்காணப்பட்ட பரவல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தலைமை மருத்துவ அதிகாரி Brett Sutton அறிவித்தார். கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாக இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் இவர்களில் இருவர் குறித்த அறிவிப்பு நேற்றையதினம் வெளியாகியிருந்தது. ஏனைய 9 பேரில் 3 சிறுவர்களும் ஒரு Arcare Maidstone முதியோர் பராமரிப்பு பணியாளரும் அடங்குகின்றனர். அதேநேரம் புதிதாக தொற்றுக்கண்டவர்களில் ...

Read More »

வண் டே மாஸ்க்கும் சமூக விழிப்பும்!

இந்தியாவில் வசிக்கும் ஓர் ஈழத்தமிழர் கூறினார் கொரோன வைரஸ் எனப்படுவது எங்களுடைய முதுகில் படிந்திருக்கும் அழுக்கை போன்றது. அது எங்களோடேயே இருக்கிறது என்று. நடப்பு நிலவரங்களை வைத்து பார்த்தால் அது சரி என்றே தோன்றுகிறது. சோதிக்கப்படாதவரை எல்லாருமே சுகதேகிகள்தான். சோதித்தால்தான் தெரியும் யாரெல்லாம் குணக்குறியற்ற நோய்க்காவிகள் என்று. கிளிநொச்சியில் அண்மையில் ஒரு பதினைந்து வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்த பின்தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்படித்தான் இப்போது இயல்பாக இறக்கும் பலருக்கும் இறந்த பின்னர்தான் அவர்களுக்கு தொற்று ...

Read More »

இளவரசர் ஹாரி- மேகன் தம்பதிக்கு 2-வது பெண் குழந்தை

இங்கிலாந்து அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன், அரச குடும்பத்தில் இருந்து விலகுகிறேன் எனக் கூறி இளவரசர் ஹாரி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சகோதரர் வில்லியம் உடன் இங்கிலாந்து அரச அரண்மனையில் வாழ்ந்து வந்தார். அதன்பின் அரச குடும்பத்தின் எந்த அடையாளங்களையும் பயன்படுத்த மாட்டேன் எனக் கூறி மனைவியுடன் அமெரிக்கா சென்றுவிட்டார். ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2019-ம் ...

Read More »

நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறதா கீர்த்தி சுரேஷ் படம்?

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ஒன்று நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், படக்குழு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு, ...

Read More »

யாழ். மாவட்டத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா

யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 92 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவற்றின் அடிப்படையில் யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 71 பேர், அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் 09 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சங்கானை பிரதேச வைத்திய சாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

Read More »