தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். நடிகையும், பாடகியான இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகியிருந்த ‘கிராக்’ திரைப்படத்தில், நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் இருந்த ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ‘திருமணம் செய்து கொண்டீர்களா?’ என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு ஸ்ருதிஹாசன், ‘இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal