ஐந்து நட்சத்திரஹோட்டல் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு மரண அச்சுறுத்தல்

பத்திரிகையாளரும் ஜனாதிபதி ஊடகபிரிவின் முன்னாள் இயக்குநருமான சமுடித்த சமரவிக்கிரம தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காவல் துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர்களின் விபரங்களை எதிர்காலத்தில் வெளியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் எனக்கு எதிராக திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எதிர்காலத்தில் நான் இவர்களின் விபரங்களை வெளியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிரான இந்த நடவடிக்கைககு ஆதரவளிப்பவர்களிடமிருந்து இனந்தெரியாததொலைபேசி அழைப்புகள் வருகின்றன,நான் ஒரு பத்திரிகையாளனாக செயற்பட்டமைக்காக மிரட்டப்படுகின்றேன்,நான் கேள்வி எழுப்பியதால் சிலர் தனிப்பட்ட ரீதியிலும் அரசியல்ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் இது என கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள வேளை சந்திமல் ஜயசிங்கவும் பியுமிஹன்சமாலியும் ஐந்து நட்சத்திர ஹேட்டலில் ஏற்பாடு செய்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த தனது செய்திகளிற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகின்றது என தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமரவிக்கிரம தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது ஜயசிங்க பியுமிஹன்சமாலிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறியமை குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

ஜயசிங்க பியுமிஹன்சமாலி மற்றும் ஹோட்டலுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் நான் இந்த விடயத்தில் உறுதியாக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்