அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்போது பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரசிற்கு இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற நபரே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே 8 ம் திகதி இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற நபர் ஒருவர் மூலமே அங்கு வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 40 வயது நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய வேளை அவர் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நபர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பியதை தொடர்ந்து ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே 23 ம் திகதி இந்த நபர் ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவ்வேளை அவர் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்திருக்கமாட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரபணு தொடர்புகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஹோட்டல் தனிமைப்படுத்தல் குறித்து அமைச்சர் டானி பியர்சன் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal