குமரன்

வெள்ளத்தில் மிதக்கும் அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான வீடுகள் மூழ்கி கிடக்கின்றன. பசிபிக் கடலில் மையம் கொண்டு இருந்த புயல் ஒன்று அவுஸ்ரேலியாவில் உள்ள தென் கிழக்கு குயின்ஸ்லாந்து பகுதியை தாக்கியது. இந்த புயல் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. புயல் தாக்குதலுக்கு பிறகு இதுவரை 40 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 20 செ.மீட்டர் மழை கொட்டி இருக்கிறது. இதனால் தெற்கு குயின்ஸ்லாந்து பகுதி முழுவதும் வெள்ளக்காடாக ...

Read More »

கைரேகை ஸ்கேனர், டூயல் கேமரா மற்றும் அட்டகாசமான செல்ஃபீ கேமரா

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 8 புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த புகைப்படத்தில் ஐபோன் 8 சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக வெளியான தகவல்களை தொடர்ந்து புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் புதிய சிறப்பம்சங்களுக்கும் ஏற்ற புகைப்படமாக இது அமைந்துள்ளது. அதன் படி புதிய ஐபோன் எடிஷன் என அழைக்கப்படும் என்றும் இதில் ...

Read More »

குவாலியர் மகாராணியின் வாழ்க்கை வரலாறு

குவாலியர் மகாராணி விஜய ராஜே சிந்தியாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா எழுதிய நூலை தழுவி தயாரிக்கப்பட்ட சினிமாப் படத்தின் டிரெயிலரை நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார். மத்தியப் பிரதேசம் மாநிலத்துக்கு உட்பட்ட குவாலியர் நகரம் வெள்ளையர் ஆட்சிக் காலத்திற்கு முன்னர் குவாலியர் என்ற சுயாட்சி பெற்ற பிரதேசமாக விளங்கி வந்தது. 15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து இந்தப் பகுதியை ஆண்டுவந்த மன்னர்கள் வம்சத்தின் கடைசி மகாராணியாக விளங்கிய ராஜமாதா விஜய ராஜே சிந்தியா, நாடு சுதந்திரம் ...

Read More »

இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் அக்ஷராவை பாராட்டியுள்ளார்

லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் பெண்ணாக நடித்துள்ளார் அக்ஷரா ஹாஸன். தனுஷின் ஷமிதாப் படம் மூலம் நடிகையானவர் உலக நாயகனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன். அவர் நடித்துள்ள லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் அக்ஷராவை பாராட்டியுள்ளார்.

Read More »

சந்தியா என்னெலிகொடவுக்கு விருது வழங்கினார் ட்ரம்பின் மனைவி!

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் 2017 ஆம் ஆண்டுக்கான “உலகில் துணிச்சலான பெண்” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மெலானியா டிரம்பினால் நேற்று வொஷிங்டன் நகரில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இவரைப் போன்று உலக அளவில் காணப்படும் 13 பெண்கள் இவ்வாறு விருது வழங்கி கௌவிக்கப்பட்டுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது. தனது கணவனுக்காக மட்டுமன்றி காணாமல் ...

Read More »

வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி விலகியது உறுதியானது

வடசென்னை படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக கூறப்பட்ட செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தில் விஜய் சேதுபதி விலகிவிட்டதாக பேச்சு அடிபட்டது. ஒருதரப்பில் இந்த செய்தி பொய் என்று கூறப்பட்டாலும், மறுபக்கம் இது வெறும் வதந்திதான் என்று கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் சேதுபதி ‘வடசென்னை’ படத்தில் விலகிவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விலகியதற்கு யாருடனும் எந்த மனஸ்தாபம் இல்லை ...

Read More »

உங்க WiFi ஜெட் வேகத்துல வேலை பார்க்கனுமா?

* அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள். * ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இடமாக பார்த்து வைத்தால் நலம். காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தாலும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இருந்தால் இன்னும் விசேஷம். ...

Read More »

அவுஸ்ரேலியா செல்ல அனுமதி கோரும் திஸ்ஸ!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல கொழும்புமேல் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். அடுத்த மாதம் 19ம் திகதி முதல்,28ம் திகதி வரையில் அவுஸ்திரேலியா செல்ல அனுமதிதருமாறு திஸ்ஸ அத்த நாயக்க கோரியுள்ளார். இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், அடுத்தமாதம் 03ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது போலியான ஆவணங்களை வெளியிட்டமை தொடர்பில் திஸ்ஸவுக்குஎதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அவுஸ்ரேலியாவில் 270 மீட்டர் வேகத்தில் வீசிய புயல்

அவுஸ்ரேலியாவில் 270 கி.மீட்டர் வேகத்தில் டெப்பி புயல் வீசியதில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இதனால் அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவுஸ்ரேலியாவில் பசிபிக் கடலில் ‘டெப்பி’ என பெயரிடப்பட்ட கடும் புயல் உருவானது. அப்புயல் நேற்று முன்தினம் குவின்ஸ்லாந்தில் போவன்- ஏர்லி கடற்கரை இடையே கரையை கடந்தது. இதனால் மணிக்கு 273 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடுமையான சூறாவளி வீசியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான ...

Read More »

வலி.வடக்கு காணிகளை விற்பனை செய்ய இராணுவம் நிர்ப்பந்தம்!

வலி.வடக்கினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை தம்மிடம் விற்பனை செய்யவேண்டும் அல்லது மேலும் நான்கு வருடங்களிற்கு வாடகைக்கு தரவேண்டுமென இலங்கை இராணுவம் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இடம்பெயர்ந்த நிலையினில் உறவினர் நண்பர்களது வீடுகளினில் வாழ்ந்து வரும் குடும்பங்களையே நேரினில் தேடிச்செல்லும் இராணுவ அதிகாரிகள் நிர்ப்பந்தித்துவருகின்றனர்.அவ்வாறு விற்பனை செய்யவிருப்பமில்லாவிடின் வாடகை ஒப்பந்தமொன்றை செய்துகொண்டு படைத்தரப்பிற்கு நான்கு வருட காலத்திற்கு வாடகைக்கு தரவேண்டுமெனவும் நிர்ப்பந்திக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது. கடந்த 30வருடங்களிற்கு மேலாக படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவித்து உதவுமாறு கோரி இலங்கை ஜனாதிபதி மைத்திரியிடம் விண்ணப்பித்தவர்களிற்கு இந்நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையினில் யாழ்ப்பாணத்திற்கு ...

Read More »