கைரேகை ஸ்கேனர், டூயல் கேமரா மற்றும் அட்டகாசமான செல்ஃபீ கேமரா

அப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 8 புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த புகைப்படத்தில் ஐபோன் 8 சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் S8+ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக வெளியான தகவல்களை தொடர்ந்து புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் மாற்றங்கள் மற்றும் புதிய சிறப்பம்சங்களுக்கும் ஏற்ற புகைப்படமாக இது அமைந்துள்ளது.
அதன் படி புதிய ஐபோன் எடிஷன் என அழைக்கப்படும் என்றும் இதில் கைரேகை ஸ்கேனர் ஐபோனின் பின்பக்கம் வழங்கப்படும் என்றும் டூயல் பிரைமரி கேமரா அமைப்பு செங்குத்தாக வழங்கப்படலாம் என இம்முறை வெளியாகியுள்ள புகைப்படத்தில் காணப்படுகிறது. இத்துடன் சாம்சங் S8 மற்றும் S8+ போன்றே டூயல் வளைந்த ஸ்கிரீன், 2.5D கிளாஸ் கொண்ட OLED பேனல் வழங்கப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் புதிய ஐபோனின் ஸ்கிரீனில் ஹோம் பட்டன் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன் ஆப்பிள் நிறுவனத்தின் 10-வது ஆண்டு ஐபோன்களாக இருக்கும் என்பதால் பல்வேறு புதிய வசதிகளும், அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் 3D சென்சிங் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம். சீனாவின் பிரபல ஐபோன் வல்லுநரான மிங்-சி கியோ வெளியிட்டுள்ள தகவல்களில் இன்பராரெட் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் மாட்யூல் தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.