குமரன்

கோட்டாபய விடுவிக்கப்பட்டார்!

டி.ஏ. ராஜபக்ஷ ;ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து ; 6 பிரதிவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே கடந்த 2019 நவம்பர் 21 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலரும், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று ஏனைய பிரதிவதிகளான 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். முதலாவது நிரந்தர விசேட மேல் நீதிமன்றம் இதற்கான ...

Read More »

இளம் கவிஞரை தடுத்து வைப்பது சட்ட விரோதமானது!

நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக ; கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் ; தடுத்து வைக்க, ஜனாதிபதி கையெழுத்திட்ட தடுப்புக் காவல் உத்தரவானது சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு ; நேற்று முதன் முறையக பரிசீலனைக்கு ; வந்த போது, மனுதாரர் சார்பில் ஆஜரான ...

Read More »

மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது

மன்னார் – மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி மூன்று மொழிகளிலும் ஒப்பு கொடுக்கப்பட்டது. இன்று காலை 6.15க்கு இந்த திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி இமானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். இதனையடுத்து திருச் சொரூப ஆசியும் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். கொவிட்-19 பெருத்தொற்று காரணமாக பக்தர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோருக்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Read More »

அமைச்சரவை அந்தஸ்து பறிபோகும் நிலையில் முக்கிய அமைச்சர்கள்!

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக மிக விரைவில் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்போது அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சரவை அந்தஸ்து பறிபோகவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செயதியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சகல துறைகளிலும் பின்தங்கியுள்ள இலங்கை நாணயத்தாள்களில் அச்சிடுவதில் மாத்திரம் முன்னிலை வகிக்கிறது. ...

Read More »

‘ முன்னே 20 வரும் பின்னே பஷில் வருவார்’

நாடாளுமன்றத்துக்கு பஷில் ராஜபக்‌ஷ  வருவது எமக்கொன்றும் புதுமையான விடயமல்ல எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார   அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வந்தபோதே  பஷில் வருவாரென்று தெரிந்துக்கொண்டோம் என்றார். எதிர்க்கட்சித்  தலைவர் அலுவலகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், அரசாங்கத்தில் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பற்றி  கதைப்பதற்கு கூட யாருமில்லை என்பதால் சேர் பெயிலென தெரிந்துக்கொண்டு  அதிலிருந்து மீள பஷிலைப் பயன்படுத்த பார்க்கின்றனர் என்றார். இந்த அரசாங்கத்தால் பொருளாதார  ...

Read More »

ஆஸ்திரேலிய குடியுரிமை விண்ணப்ப கட்டணம் 72 வீதத்தால் அதிகரிப்பு!

ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணம் ஜுலை 1 முதல் 72 வீதத்தினால் அதிகரிக்கிறது .இதுவரைகாலமும் 285 டொலர்களாக இருந்த குடியுரிமை விண்ணப்ப கட்டணம் இனி 490 டொலர்களாக அதிகரிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை குடிவரவு அமைச்சர் Alex Hawke அண்மையில் வெளியிட்டிருந்தார். கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் இவ்வாறு குடியுரிமை விண்ணப்ப கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்தார். குடியுரிமைக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பதால் இதற்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியுள்ளதாகவும், பல விண்ணப்பங்கள் மிகுந்த சிக்கல்வாய்ந்தவையாக காணப்படுவதால் அவற்றின் பரிசீலனைக்கு அதிக நேரமும் அதிக ...

Read More »

சீனாவின் நூறு பூக்கள்

எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய் நகரில், ஒரு ஓட்டு வீட்டில் கட்சி நிறுவப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, அங்கே நடந்த கூட்டத்தில் 57 பேராளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஹூனான் விவசாயி மகன் ஒருவரும் இருந்தார். பீஜிங் பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் மா சேதுங். அவரது படம்தான் இப்போது தியானென்மென் சதுக்கத்தின் முகப்பை அலங்கரித்துவருகிறது. முன் கதை ...

Read More »

அதிக படங்களில் நடிக்காதது ஏன்?

அருவி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா’ என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார். இந்நிலையில், ...

Read More »

கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை மற்றும் பனிக்காற்று அந்த நாட்டு மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதீத வெப்பத்தால் ...

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராணா

பாகுபலி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ராணா, தெலுங்கில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். தமிழைப் போலவே தெலுங்கிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார். தற்போது ஐந்தாவது சீசனுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் முன்னர் ஒத்துக் கொண்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் காரணமாக நாகர்ஜுனா இந்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் ...

Read More »