பாகுபலி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் ராணா, தெலுங்கில் நடைபெறும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
தமிழைப் போலவே தெலுங்கிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனை நானி, மூன்று மற்றும் நான்காவது சீசன்களை நாகார்ஜுனா தொகுத்து வழங்கினார்.
தற்போது ஐந்தாவது சீசனுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் முன்னர் ஒத்துக் கொண்ட திரைப்படங்களின் படப்பிடிப்புகள் காரணமாக நாகர்ஜுனா இந்த சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருக்குப் பதிலாக ‘பாகுபலி’ நடிகர் ராணா தொகுத்து வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு ராணா ‘நம்பர் 1 யாரி’ என்ற டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal